என் மின்னஞ்சல் Hacked

இது ஒரு சுய நலப்பதிவு ;) உங்கள் ஆதரவுக்காக எழுதப்பட்டுள்ளது.

நேற்று என் மின்னஞ்சல் Hack செய்யப்பட்டது, இது குறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறேன்.அதனால் Hack செய்யப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்க இயலவில்லை.நீங்கள் யாராவது இதற்கு முன் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா சைபர் க்ரைமில் புகார் தருவதால் பலன் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என்று தயவு செய்து கமெண்ட்டில் தெரிவிக்கவும்.அப்புகாரில் என் தளத்தில் இதைப் பற்றி எழுதுவதாக தெரிவித்திருக்கிறேன் ஆதலால் ஆதரவு தெரிவிப்போர் தயவு செய்து கமெண்ட்டில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Categories:

10 comments:

said...

மின்னஞ்சல் திருடப்பட்டது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது, யாகூ மின்னஞ்சல் எளிதாக திருடப்பட வாய்ப்புள்ளது...

said...

http://iniyathalam.blogspot.com/2006/06/hacked.html

மின்னஞ்சல் திருடப்பட்டது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது, யாகூ மின்னஞ்சல் எளிதாக திருடப்பட வாய்ப்புள்ளது...

said...

எதேனும் பலன் இருக்கும் என நம்ப விரும்புகிறேன்.

said...

நண்பரே,

நல்லவேளை உங்கள் வலைப்பூவாவது தப்பித்ததே!

எனது யாகூ மின்முகவரி ஓராண்டுக்கு முன்னர் ரியாத் நகரில் இருந்து திருடப்பட்டு எனது வலைப்பு, முத்தமிழ்மன்ற புத்தக குழுமம் அழிக்கப்பட்டது. மின்முகவரியும் திரும்பக் கிடைக்கவில்லை. இதுகுறித்து நான் யாகூ, சைபர் என எல்லா கம்பெளெயிண்டு கொடுத்தும் ஒரு புண்ணியமும் இல்லை.

நெட்டில் உங்களைப்போல ரொம்ப ஓவரா பிலிம் காட்டிக் கொண்டிருந்தேன். வெச்சானுங்க ஒரே ஆப்பு. அதுக்கப்றம்தான் கொஞ்சம் அடங்குனேன்!

said...

மிக்க நன்றி குழலி,சுரேஷ் எனக்கென்னமோ நம்பிக்கையில்லாமல் தான் கம்ப்ளையண்ட் செய்தேன் நான்கு மெயில் முகவரிகளுக்கு அனுப்பினேன் இப்போதே அதில் ஒன்று Failure Delivery...

என்ன மூர்த்தி சத்தமில்லாமல் ஓவராக பிலிம் காட்டுகிறேன் என்று சொல்லி விட்டீர்கள்,நான் முடிந்தவரை அமைதியாத் தானேப்பா இருக்கேன்

said...

மன்னிக்கவும் கோகுல். தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

நான் பிலிம் என்று சொன்னது கணினி பற்றிய தகவல்களை மட்டுமே!

இந்த மென்பொருள், வன்பொருள் என உங்களைப்போல அதீத ஈடுபாடு உண்டு எனக்கு.

said...

இல்லை மூர்த்தி உண்மையிலேயே அவ்வப்போது எனக்கே ஓவராகப் போகிறோமோ என்று சந்தேகம் வருமில்லையா ;) அதை தான் சொல்கிறீகளோ என்று தான் கேட்டுவிட்டேன்

உடனடி பதிலுக்கு நன்றி தவறாகப் புரிந்து கொண்டமைக்கு மன்னிக்க வேண்டும்.

said...

எப்படிங்க ஹாக்ட்ன்னு தெரிஞ்சது? நம்ம மெயிலும் யாராவது பாக்குறாங்களான்னு தெரிஞ்சிக்கலாமேன்னுதான் கேட்கறேன்.

said...
This comment has been removed by the author.
said...

கண்டிக்கப்பட வேண்டிய விசயம்.
என் நண்பன் ஒருவன் இதுபோல பாதிக்கப்பட்டான்...
அவனும் யாகூ தான் பாவித்தான்... அவனின் கருத்துப்படி மெயிலை ஹக் பண்ணுவது அவ்வளவு கஷ்டம் இல்லையாம்......