இனி நீங்களும் வாய்ஸ் கொடுக்கலாம்


உங்கள் செய்தியை பேசி ரெகார்ட் செய்து நண்பர்களுக்கு அனுப்ப நிறைய தளங்கள் உண்டு அவற்றில் ஏற்கனவே சிறப்பாக இருப்பது இத்தளம் இதில் நீங்கள் மிக எளிதாக வாய்ஸ் ரெகார்ட் பண்ண முடியும் (மைக்ரோ போன் அவசியம்) அழகான நேவிகேஷன்


அடுத்தது இத்தளம்
இது இச்சந்தையில் புதிதாக நுழைந்திருக்கிறது ஆனாலும் நிறைய புது வசதிகளை தருகிறது இதில் உங்கள் வலைப்பூவிற்கு ஆடியோ செய்தி அனுப்பலாம் , உங்கள் ப்ரோபைலுக்கு ஆடியோ அறிமுகம் தரலாம் மற்றபடி குரூப் பார்ம் பண்ணுவது, தேடல் என வழக்கமான வசதிகளும் உண்டு

Categories: ,

சூப்பர் இமேஜ் சேமிப்பு தளம்


புகைப்பட (டிஜிட்டல் இமேஜ்களை இப்படி சொல்லலாமா?) சேமிப்பு தளங்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக நிறைய தளங்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன. அவற்றில் புதிய ஐடியாக்களால் வித்தியாசப்பட்டு நிற்பது இத்தளம். நான் உபயோகித்த வரை பதிவேற்றம் (அப்லோட்) அருமை எளிதாகவும் வேகமாகவும் நிறைய படங்களை ஏற்ற முடியும். அப்புறம் மிக்கியமானது ஒவ்வொரு நிழற்படத்திற்கும் ஆடியோ கேப்ஷன் அதாவது உங்கள் குரலிலேயே ஒரு சின்ன விளக்கம் தந்து கொள்ளலாம், இன்னொரு வசதி மூன்று மடங்கு டிஜிட்டல் சூம் உண்டு பாக்க படம் மற்றபடி ரொட்டேட், ஸ்லைட்ஷோ, ஆல்பம், நிழற்படம் எடுத்த நாள் போன்ற தகவல்கள் (டிஜிட்டலாக இருந்தால்) ஆகிய வசதிகளும் உண்டு.


Categories:

முன்னேற ஒரு தளம்

இத்தளத்தில் வாழ்க்கைக்கு உதவும் யோசனைகளை தொகுத்திருக்கிறார்கள்.மனம் சலனமற்றிருக்கும்போது பொறுமையாக படித்தால் நிறைய பயனுண்டு.இவை இப்போதெல்லாம் விலையுயர்ந்த யோசனைகளாக ‘கோச்சிங் க்ளாஸ்களில்’ சொல்லித்தரப் படுபவை.

Categories:

புதுமையான புகைப்பட சேமிப்பு தளம்


நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இத்தளம் இப்போது பீட்டாவிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது.உங்கள் புகைப்படங்களை “ஃபேஸ் ரெகக்னிஷன்” மூலம் தேடுதல் செய்யலாம்.இது தான் சிறப்பம்சம் மற்றபடி வழக்கமான மசாலா தளம் தான் இருந்தாலும் வருங்காலத்தில் நிறைய எதிர்பார்க்கலாம்.

Categories:

உங்கள் ப்ராஜெக்ட்களை கவனிக்க


முன்பெல்லாம் இதற்கென்றே தனியாக ஒரு சாஃப்ட்வேரை கம்பெனிகள் டிசைன் செய்யும், (தமிழ்ல பேசு நண்பா நிறைய பேர் திட்டு வாங்கிட்டு இருக்காங்க) சரிப்பா வடிவமைத்தன. இப்போது இதற்கென்றே நிறைய தளங்கள் வந்து விட்டன, அவற்றில் (சிறந்த) ஒன்று இத்தளம்.முக்கியமானது இவற்றின் வசதிகள் அது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட ஆதரவு.சரி ஏகப்பட்ட நல்ல தளங்கள் நிறைய காண்பதால் இனி கொஞ்சம் அதிகமாகவே பதிவுகள் (தொல்லைகள்) இருக்கும் பரவாயில்லையா?

Categories: ,

ஆன்லைன் ஸ்டோரேஜ் தளங்களின் பட்டியல்

இங்கே முழுக்க முழுக்க ஒப்பீட்டோடு ஏகப்பட்ட தளங்கள் தந்திருக்கிறார்கள்.மறக்காமல் கமென்ட்களை பாருங்கள் விட்ட தளங்களும் அங்கே இருக்கின்றன (இதே போல் நான் சொல்லும் சேவையைப் போலவே வேறு ஏதேனும் சேவையை நீங்கள் கண்டால் கமெண்ட்டில் எழுதலாம்) என்ஜாய்

Categories:

ஆன்லைன் படிவம்

இப்பல்லாம் இணையத்துல நாம எதுக்குமே கஷ்டப்படத் தேவையில்ல இதோ ஆன்லைன் ஃபார்ம் உருவாக்க ரெண்டு தளங்கள் (அதுவும் பாருங்க ஒரு தளம் பாக்கவே முடியல எந்த வகை சேவைனாலும் ரெண்டு மூணு தளங்கள் கிடைக்குது) முதல் தளம்
நம்மள பொறுத்த வரை இது பெஸ்ட் ஏன்னா இப்ப தான் டெவலப்பிங்ல இருக்கு அழகான இன்டர்ஃபேஸ் டெமோவுக்காக யோசிச்சப்ப புதுசா ஒரு தளம் உருவாக்கிட்டேன் ஹி ஹி ரெண்டாவது இதுல ஒரே ஒரு ஃபார்ம் தான் உருவாக்க முடியும் (பணம் குடுத்தா அப்க்ரேட் உண்டு) இத பாத்துட்டேன்கிறதுக்காக சொல்றேன் அப்புறம் உங்க சாய்ஸ்

Categories:

உங்கள் க்ளிக்குகள் மூலம் கூட உதவலாம்



மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் இயக்கும்
இத்தளத்தில் உள்ள தேடுதல் கருவியில் கிடைக்கும் ரிசல்ட்டை க்ளிக் செய்தால் வரும் பணம் NSPCC எனப்படும் child cruelty தடுப்பு (இதற்கு தமிழில் என்ன?) அமைப்புக்கு போய் சேரும். நல்ல விஷயம் உதவுவோமே

Categories:

ஆன்லைன் வீடியோ சேவை

இணையத்துல ஏற்கனவே நிறைய வீடியோ கடல்கள் உண்டு அதுல இது கொஞ்சம் வித்தியாசமாவும் இருக்கிறதால சொல்ல வேண்டி இருக்கு.


இந்த தளம் மத்த எல்லா தளங்கள் போலவும் வீடியோவ சேமிச்சுக்க உதவறது தான்,அதுக்கும் மேல நீங்க மிக எளிமையா வீடியோவ மிக்ஸ் பண்ண முடியும் சவுண்ட் மிக்ஸிங் கூட பண்ணலாம் மற்றும் குரூப், வசதிகளும் உண்டு ஆனாலும் இன்னும் நிறைய வசதிகள் தரவேண்டி இருக்கு


அடுத்தது இந்தத் தளம் இது தான் இப்ப நம்பர் ஒன் இதப்பத்தி எதுவும் சொல்லத் தேவையில்லைனு நினைக்கிறேன் நீங்களே போய் பாத்துக்குங்க

Categories:

பிரச்னை

இதற்கு முன்பு நான் எழுதிய பதிவு தமிழ்மணத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை இந்த இடுகை எடுத்துக்கொள்ளப்படுமா என அறியவே இப்பதிவு மற்றும் உங்கள் "உங்கள் வலைப்பூவிற்கு வகைப்பாடு (கேட்டகரி) சேர்ப்பது எப்படி?" பதிவு சில பிரச்னைகளால்
இங்கேயும் இடப்பட்டிருக்கிறது

ஓட்டு கேட்போமா?

இன்னைக்கு வலைப்பூக்கள்ல ஓட்டு போட போல் வைக்கிற சேவை வழங்குற தளம் ரெண்டு சொல்றேன்.அதுக்கு முன்னாடி நேத்து கோடிங் பத்தி எழுதினேன் இல்லையா அதில உங்களுக்கு கோடிங் காட்ட வேண்டிய பிரச்னையால உங்களால கமென்ட் எழுத முடியாம போயிருக்கலாம்.இனி அப்படி நடக்காது, இப்ப விஷயத்துக்கு வருவோம்.


ரெண்டு தளங்களுமே மிக எளிதாக இன்ஸ்டால் செய்ய முடியும் வழிமுறை தருகின்றன.முதல் தளம் இது மிக அழகான டிசைன் தளம் மற்றும் நம் தளத்தில் தெரியும் ஓட்டு ”போல்” கோட் ரெண்டுமே அழகா இருக்கு.ஆனா தமிழ்ல யுனிகோட் சப்போர்ட் ஆகாது.(டெமோ)





அடுத்தது இந்தத் தளம் இதுல டிசைன் கொஞ்சம் சுமாரா தான் இருக்கு ஆனா யுனிகோட் சப்போர்ட் ஆகும்,தமிழ்ல வேணும்கிறவங்க இத உபயோகிச்சுக்கலாம்.

Categories:

உங்கள் தளத்தில் எந்தெந்த லிங்க் க்ளிக்கப் படுகிறது?

அதை அறிய வசதி செய்யும் ஒரு தளம் ஏற்கனவே என் சைட் பாரில் இருக்கிறது. இம்மாதம் புதிதாக இரு தளங்கள் கண்டேன் முதல் தளம்... இது ட்ரையல் தான் தருகிறார்கள் பணம் கேட்க வாய்ப்புள்ளது இந்த சைட் போய் க்ளிக் பண்ணவும் எப்படி இயங்குகிறது என அறியலாம் இரண்டாவது இத்தளம் பார்க்கவே அழகு (எனக்குப் பிடித்திருக்கிறது) ஆனால் பாவிகள் கமிங் சூன் போட்டு விட்டார்கள் பதிவு
மட்டுந்தான் செய்ய விடுகிறார்கள் (ம்ச் திட்டக்கூடாது). ஓவர்லே ஹீட் என்று ரெண்டு பட்டன் இருக்கிறது விவரம் அறிந்து கொள்ளவும் நல்ல தளமாக வரும் இப்போதே உறுப்பினராகிடுங்கள் அதுவரை இதை வைத்து ஓட்ட வேண்டியது தான்.

Categories:

கருத்திடுகை (கமென்ட்) பிரியர்களுக்காக


எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு கமெண்ட் விரும்பி அல்லது கமெண்ட் எழுத விரும்புபவர் ஆனால் நேரமில்லை என்பவர் என வைத்துக்கொள்வோம். (கருத்திடுகை? - பூக்காடு காண்க) மானாங்கண்ணியாக நீங்களும் பத்து பதினைந்து வலைப்பூக்களுக்கு கமெண்ட் அடிக்கிறீர்கள்.அவற்றில் கருத்துகள், கேள்விகள், நியாயங்கள் என நிறைய இருக்கலாம், அவற்றிற்கு மற்றவர்கள் அப்புறம் பதிலிடுவார்கள். இப்போது ஒவ்வொரு வலைப்பூவுக்கும் போய் யாரும் உங்களுக்கு பதிலிட்டார்களா? என்ன விவரம் என்று அலைய வேண்டும்.உங்கள்
மொத்த கருத்திடுகைகளையும் ஒரே இடத்தில் பார்த்து அதற்கு யாராவது பதிலிட்டால் உடனே தகவல் தெரிவித்து ஒருங்கிணைக்க ஒரு தளம் இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி யோசித்து உருவாக்கப்பட்ட தளம் தான் இது. உறுப்பினராக பதிவு செய்து விட்டு ஹோம் பக்கம் வாருங்கள் அங்கே கேப்சர் என்று ஒரு பெரிய லின்க் இருக்கும் அதன் பின் செல்ல எல்லா விவரங்களும் அறியலாம்.வேண்டுமானால் முதலில் டெமொ படியுங்கள்

Categories:

உங்கள் தளத்தை அழகு படுத்த

ஏற்கனவே உங்களுக்கு தெரிந்த தளமாக இருக்கலாம் இருந்தாலும் தெரியாதவர்களுக்காக சொல்கிறேன். இத்தளத்தில் ஸ்கிரிப்ட் மூலம் தளத்தை அழகு படுத்தும் ஏகப்பட்ட செய்முறை விளக்கங்கள் உண்டு. உங்களுக்கு பெரிய புரோக்ராமிங் அறிவு இருக்க வேண்டிய தேவை இல்லை. தெளிவான விளக்கங்களும் தரப்படுகிறது, என் வலைப்பூக்களில் நீங்கள் பார்த்த பாப்- அப் பெட்டி செய்தி இத்தளத்தில் கிடைத்ததே.




Categories: ,

இன்னொரு ( நல்ல) தள விவர சேவை

என் தளங்களை உற்றுப் பார்த்திருந்தாலே இன்னொரு ஐகான் முளைத்திருப்பது தெரிந்திருக்கும், எனினும் யாரும் மிஸ் பண்ணக்கூடாதென்பதற்காக சொல்கிறேன். performancing எனும் இத்தளம் வலைப்பதிவர்களுக்கு டிப்ஸ் தரும் ஒன்று, இப்புள்ளி விவர சேவை வருவதற்கு முன்பே இத்தளத்தில் உறுப்பினராக பதிந்து இருந்தேன், இப்போது புதிய சேவையாக தருகிறார்கள், மற்ற சேவை வழங்கிகளை விட சிறப்பாக உள்ளது, எதிர்காலத்தில் இன்னும் நன்றாக மெருகேற்றுவார்கள் என நம்புவதால் பரிந்துரைக்கிறேன் மேலும் விவரங்களுக்கு ஸ்கிரீன் ஷாட் பார்க்கவும்



Categories:

ஃபைல் ஷேர் மென்பொருள்


எனக்குத் தெரிந்து இது தான் சிறந்த செயலி பகிர் மென் பொருள் (தமிழாக்கம் : அடியேனே) அதுவும் இலவசம், இல்லாட்டி எழுதுவேனா? பதிவிறக்கம் செய்யுமுன் தளத்தில் தரப்பட்டிருக்கும் விபரங்களை கொஞ்சம் படித்துக்கொள்ளுங்கள். பல்மென்பொருள் பிரியர்களுக்கு பிடிக்கும்.தனிப்பட்ட எச்சரிக்கை: வைரஸ் செக் செய்யாமல் பதிவிறக்கம் செய்த எதையும் திறக்க வேண்டாம்.தள முகவரி:க்ளிக்

Categories: ,

டெஸ்க்டாப் ஆர்எஸ்எஸ் மென்பொருள்

வலைப்பூ தகவல் அறிய உதவும் மென் பொருள், முழுக்க முழுக்க க்ளிப்களால் இயங்குகிறது.அதாவது இவர்களின் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் பிறகு பல டெவலப்பர்கள் தரும் விதவிதமான சேவை வழங்கி க்ளிப்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து அவை பற்றிய செய்திகளை உடனுக்குடன்
அறியலாம்.குழப்பமாக இருந்தால் இத்தளம் சென்று பார்த்தீர்களானால் விளங்கி விடும், அப்புறம் ‘ஏன் இந்தப்பய இதப் போட்டு இந்தக் குழப்பு குழப்பறான்’ என்பீர்கள்.இதன் மூலம்
வானிலை, ஸ்டாக்ஸ், செய்திகள், ஆர்.எஸ்.எஸ் ஃபீட்ஸ், மற்றும் பல வசதிகளை பயன்படுத்தலாம். நீங்களும் டெவலப்பராக க்ளிப்களை உருவாக்கலாம்,மிக எளிமையாக. நான்
கூட மூன்று க்ளிப்களை உருவாக்கி இருக்கிறேன். நிறைகள்: அழகிய வடிவமைப்பு (அல்வா
போல வழுக்குகிறது), எளிமையான நேவிகேஷன், ஏகப்பட்ட வசதிகள். குறைகள்: முதல் க்ளிப்
உருவாக்க பயங்கரமாக குழம்பும். பக்ஸ் இருக்க வாய்ப்பிருப்பதால் அனுபவமில்லாதவர்கள்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம் செய்தாலும் மற்ற தகவல்களை பத்திரமாக சேமித்துக்
கொள்ளுங்கள் என்கிறார்கள் (கவலை வேண்டாம் அரிதாகவே அப்படி நிகழும் என நம்புவோம்)தள முகவரி: க்ளிக்

Categories: ,,

உங்கள்விருப்படொமைன்நேம்.tk


டெமோ : :க்ளிக் இது ஒரு ரி-டைரக்டிங் தளம். சிறப்பம்சங்கள் ஈ-மயில் ஃபார்வார்டிங் ட்ராபிக் செக் குறைகள் : லேசாக கடுப்படிக்கும் டிசைன், தெளிவான நேவிகேஷன் இல்லை. அவர்கள் சர்வீஸை இலவசமாக நீங்கள் உபயோகப் படுத்துவதற்காக ஒரு விளம்பர பேனரை (ப்ளாக்கர் போலவே) உங்கள் சைட்டில் காட்டுவார்கள்.மற்றபடி சிறியதாக யு.ஆர்.எல் வேண்டும், சொந்த டொமைன் நேம் வேண்டுமென்பவர்களுக்கு இது நல்ல தளம்.தள முகவரி:க்ளிக்

Categories:

உங்கள் ஆர்ச்சிவை அழகாக்க

டெமோ காண க்ளிக்

கீழே தரப்பட்டிருக்கும் தளத்தில் உள்ள கோடிங்கை காப்பி செய்யுங்கள், உங்கள் ப்ளாக்கர் டெம்ப்ளேட்டுக்கு செல்லுங்கள், அதில் ஆர்ச்சிவ் இரு (அ) மூன்று வரி கோடிங் இருக்கும் ரீப்லேஸ் செய்யுங்கள் டெஸ்ட் செய்யுங்கள்,சந்தேகமிருப்பின் அதில் எழுதியிருக்கும் கைட்லைனை ஒருமுறை படித்து செயல்படவும் தள முகவரி: க்ளிக்

Categories: ,

உங்கள் வலைப்பூவில் மல்டிமீடியா


ஃபோட்டோ, வீடியோ, ஆடியோ அனைத்து மல்டிமீடியா அப்ளிகேஷன்களையும் ஒரே வெப்ஸைட் மூலம் ஹோஸ்ட் செய்ய இத்தளம் உதவுகிறது.மற்றும் வழக்கம் போல இது இலவச சேவையே.இதன் பிரிவியூ பார்க்க விரும்புபவர்கள் பூக்காடு சென்று பார்க்கவும், சேவைத்தள முகவரி : க்ளிக்

Categories:

உங்கள் வலைப்பூவில் ஃப்ளாஷ் கேம்


உங்கள் வலைப்பூவை மேலும் சுவாரசியமாக்க கம்பெனி வழங்கும் அற்புதப் பரிசு இந்த சைட்.இதில் பதிவு செய்து கொண்டு அவர்கள் தரும் கோடை உங்கள் வலைப்பதிவில் ஏற்றினால் போதும்.மல்டி பிளேயர் வசதியும் உண்டு. நிறைய கேம்களும் வைத்திருக்கிறார்கள்.அப்புறமென்ன...தள முகவரி:
க்ளிக்

Categories:

ஒரு அழகிய ஆர்கனைசர்

இன்டர்நெட்டில் நிறைய பிளானர்கள் உண்டு.தேடியதில் ஓரளவு பார்க்கவே அழகாக டிசைன் செய்திருப்பது இது தான்.இதுவும் பீட்டா ப்ரொடக்ட் என்பதால் தரத்தைநம்பலாம்.உங்கள் ஈவன்ட்களை ஹைலைட் செய்யவும், தேடவும் வசதி உண்டு, மூன்று டிசைன்கள் தருகிறார்கள். நண்பர்களை சேர்க்கும் வசதியும் உண்டு.இச்சேவை இலவசமே. .தள முகவரி: க்ளிக்

Categories: ,

மைக்ரோசாஃப்ட் வழங்கும் இலவச தளம்

சிறு முதலீட்டாளர்களைக் கவர மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பீட்டா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. சொந்த டொமைன் நேம், டூல்ஸ், 5 இ-மெயில் அக்கவுண்ட் மற்றும் ட்ராஃபிக் ரிப்போர்ட் ஆகிய சேவைகளை இலவசமாக வழங்குகிறது.மற்றும் கட்டண சேவகளும் உண்டு (நமக்கெதற்கு அதெல்லாம்).

இலவச சேவையை ஸ்பான்சர் விளம்பரம் மூலமாக சமாளிப்பதாக சொல்லப்படுகிறது, எனினும் உங்கள் இலவச வெப்சைட்டில் இவிளம்பரங்கள் இருக்காது, நீங்களும் மற்ற விளம்பரங்களை வெளியிட தடையில்லை, கடைசியாக ஆனால் முக்கிய செய்தி : இச்சேவை தற்போது யு.எஸ் வாழ்வோருக்கு மட்டுமே.
தள முகவரி: க்ளிக்