என் மின்னஞ்சல் Hacked

இது ஒரு சுய நலப்பதிவு ;) உங்கள் ஆதரவுக்காக எழுதப்பட்டுள்ளது.

நேற்று என் மின்னஞ்சல் Hack செய்யப்பட்டது, இது குறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறேன்.அதனால் Hack செய்யப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்க இயலவில்லை.நீங்கள் யாராவது இதற்கு முன் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா சைபர் க்ரைமில் புகார் தருவதால் பலன் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என்று தயவு செய்து கமெண்ட்டில் தெரிவிக்கவும்.அப்புகாரில் என் தளத்தில் இதைப் பற்றி எழுதுவதாக தெரிவித்திருக்கிறேன் ஆதலால் ஆதரவு தெரிவிப்போர் தயவு செய்து கமெண்ட்டில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Categories:

BashaIndia விருது முடிவுகள் அறிவிப்பு

சில நாட்களுக்கு முன் பாஷா இந்தியா இணைய தளம் வருடாந்திர சிறந்த பதிவருக்கான விருதுக்கு அனுப்பச்சொல்லி கேட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.அதில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ் மணத்திற்கு 'டெக்னாலஜி' யின் கீழ் விருது தரப்பட்டுள்ளது. பரிசீலனைக்கு அனுப்பியவர்கள் பார்க்கவும்.

(எனக்கு 50 Early Bird Members ல் பெயர் போட்டிருக்கிறார்கள், என்ன அர்த்தம்?)

Categories:

கோப்பு உடைக்க (ம்ம்ம்... File Splitter)

பெரிய அளவிலான கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்ப முடியாமல் கஷ்டப்படுபவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.நீங்கள் செய்ய வேண்டியது இந்த செயலியை பதிவிறக்கம் செய்வது தான்.இது தரப்படும் கோப்பை எத்தனை பாகமாகவும் பிரிக்கும்,அதே போல பிரிக்கப்பட்ட கோப்புகளையும் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

Categories:

ஆன்லைன் HTML பிரிவியூ

குறிப்பு: மேலே சொன்ன எல்லாவற்றுக்கும் தமிழில் மொழிமாற்றித் தரவும்.

நீங்கள் ஒரு வலைநுட்பராக (web designer?) இருந்தால் இத்தளம் உங்களுக்கு மிகவும் உதவும்.வலைப்பதிவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் HTML ஐ கையாள்வதால் இங்கே சொல்கிறேன்.அது மட்டுமின்றி ப்ளாக்கரில் நீங்கள் ஒவ்வொரு முறை பிரிவியூ பார்க்கும்போதும் அது உங்கள் விளம்பரதாரர்களால் இம்ப்ரெஷனாக கவனிக்கப்படுகிறது ஆகவே இது மாதிரியான ஒரு தளம் இருப்பது உங்கள் வேலையை எளிதாக்கலாம்.

முதல் விஷயம் இது Firefoxல் மட்டுமே வேலை செய்யும்.இத்தளத்திற்குள் போனதும் கொஞ்சம் விளையாண்டு பார்த்தால் புரியும் அல்லது வலது பக்கத்து ஸ்கிரிப்டை அழித்தால் இடது பக்க ரிசல்ட் பக்கம் மாறும்.அதாவது கோடிங் வலது பக்கமும், ரிசல்ட் இடது பக்கமும் உள்ளது.ஏதாவது ஒரு ஸ்கிரிப்டை இப்போதைக்கு என் தளத்தில் ரைட் க்ளிக் செய்து வியூ சோர்ஸ் செய்து அதை அங்கே போடுங்கள், தானே ஸ்டைல் ஷீட் ஸ்கிரிப்ட் அதற்கான டேப்புக்குள் போய் விடுவதை கவனிக்கலாம்.

ஏகப்பட்ட ஆங்கில வார்த்தைகள் ஸாரி ச்சே மன்னிக்கவும்.

Categories:

எந்த அளவிலும் கோப்புகளை அனுப்ப



எந்த அளவிலும் இருக்கும் கோப்பு(file)களை அனுப்ப இந்த செயலி உதவுகிறது.இதை அனுப்புனரும்(sender), பெறுநரும்(receipient) பதிவிறக்கம் செய்து கொண்டால் போதுமானது.மின்னஞ்சல் மூலம் இது செயல்படுகிறது,எல்லா கோப்புகளும் .pando என்று மாற்றப்படும்,பிரிவியூ முறையில் அனுப்பப்பட்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்யுமுன்பேயும் பார்த்துக் கொள்ளலாம்.இப்போதைக்கு betaவில் இருப்பதால் 1 GB வரை மட்டுமே அனுப்ப இயலும்,விரைவில் கட்டுப்பாடற்ற வகையில் எந்த அளவுள்ள கோப்புகளையும் அனுப்ப வகை செய்யப்படும் என்கிறார்கள்.

Categories:

Affiliate முறையில் விருப்பமுள்ளோருக்கு

ஆன்லைனில் உங்கள் தளத்தை பார்ப்போர் பொருட்களை ஆன்லைனில் வாங்குபவர்கள் என நீங்கள் கருதினால் இத்தளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

Amazon மாதிரியான தளங்கள் கொண்டு விற்கும் முறையை எளிதாக்குகிறார்கள்.

இது முதல் தளம் நீங்கள் விரும்பும் பொருட்களை பதிந்து கொண்டு பிறகு உங்கள் வலைப்பூ,இன்ன பிறவற்றில் Broadcast செய்யலாம்.


அடுத்தது இத்தளம் இது இன்னும் எளிதானது, ஒவ்வொரு பதிவிலும் உங்கள் விருப்பமான அல்லது விற்க விரும்பும் பொருளை keyword ஆக எழுதினால் போதும் அப்பொருள் சம்பந்தப்பட்டவை விளம்பர பகுதியில் தெரியும்,amazonல் உறுப்பினராக இருக்க வேண்டும்.

Categories:

30 Boxes சில மாற்றங்கள்

30 Boxes எனும் ஆன்லைன் ஒழுங்குபடுத்தி (organizer) தளத்தைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்.இத்தளம் இப்போது இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.மேல் இடது பக்கத்தில் webtop என்றிருப்பதை கவனிக்கவும்.அதை க்ளிக் செய்தீர்களானால் Mac மாதிரியான ஒரு பக்கம் கிடைக்கும்,அதில் நாட்குறிப்பு,இன்றைக்கு செய்ய வேண்டியவை,Google தேடுதல்,Yahoo மின்னஞ்சல் ஆகியவற்றுக்கான லிங்க்கள் இருக்கும்.Settings சென்று உங்களுக்கு பிடித்த தளங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்,எத்தனை வேண்டுமானாலும்.

குறிப்பு: 30 Boxes தமிழ் யுனிகோட் சப்போர்ட் செய்கிறது.உங்கள் தினசரி தேவைகளை தமிழிலேயே எழுதலாம்,இது உங்களை நிச்சயம் ஊக்குவிக்கும் என நம்புகிறேன், தள்ளிப்போடுவதை தவிர்க்க.

Categories:

ஆன்லைனில் சுடோகு விளையாட


நீங்கள் போரடிக்கும்போது ஆன்லைனிலேயே சுடோகு விளையாட இத்தளம் செல்லலாம்.இன்னொரு சுடோகு தளத்திற்கும் லிங்க் தந்திருக்கிறார்கள்.Free trial பதிவிறக்கமும் உண்டு.லெவல்,நிறுத்த வசதி,இன்னும் நிறைய ஆப்ஷன்கள் உண்டு.

திரையை உற்றுப்பார்ப்பது மட்டுந்தான் பிரச்னை ^) .

Categories: ,

மரண தேதி அறிய விருப்பமா?



உங்கள் மரண தேதி சொல்ல இங்கே ஒரு தளம் இருக்கிறது.சில பல கேள்விகளைக் கொண்டு உங்கள் மரணம் எந்த வயதில் நிகழலாம் என கூறுகிறார்கள்.ஆனால் தேமே என்று அதை மட்டுமே சொல்கிறார்கள், மருத்துவர்கள் வைத்து செய்யப்பட்டதாக சொல்கிறார்கள் எப்படி இதை முடிவு செய்கிறார்கள் என்றும் சொன்னால் பார்ப்போர் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும் இல்லையா?

Categories:

உயிர் காக்க இணையம்



இணையம் பொழுதுபோக்குக்காக இருந்த நிலை மாறி அத்தியாவசியம் என்கிற நிலைக்கு (வளர்ந்த நாடுகளில் வந்து விட்ட மாதிரி) வளரும் நாடுகளிலும் முன்னேறி விட்டது.பாரத் திருமண தகவல் மையத்தின் பொதுச்சேவையாக இரத்த தான இணைய வங்கி உருவாக்கப்பட்டிருக்கிறது.இதில் அவசரத்திற்கு என தேட வசதியாக உங்கள் ஊரில் உங்கள் கிராமத்தில் யாரேனும் டோனர் இருந்தால் அவர் முகவரி தரப்படுகிறது.உறுப்பினராகும்போதும் எல்லா ஊர்களின் கிராமங்கள் கூட வகைப்படுத்தப் படுகின்றன.மற்றும் நண்பர்களுக்கு சொல்லும் வசதி,டிப்ஸ் ஆகிய இன்னபிற செய்திகளும் உண்டு.

Categories: ,

தகவல்கள் பத்திரம்

உங்கள் தகவல்களை பத்திரமாக வைத்துக் கொள்ள நிறைய செயலிகள் உண்டு.இலவசமாக மிகவும் பாதுகாப்பானதாக வைக்க விரும்பினால் இச்செயலியை எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் இதில் text fileகளை மட்டுமே பாதுகாக்க முடியும்.உங்கள் password,serial number போன்ற தவல்கள் அடங்கிய கோப்புகளை இங்கு பாதுகாக்கலாம்.இதே நிறுவனத்தின் மற்ற செயலிகளை விற்க ஒரு விளம்பரமாக இதை இலவசமாக தரும் பழைய வியாபார உத்தி தான்,அதனாலென்ன?

Categories: ,

ஆன்லைன் நட்பு வித்தியாசமாக


ஆன்லைனில் இதுவரை நண்பர்களை தேர்வு செய்யும் விதம் வழக்கமானது ஆனால் இத்தளம் கொஞ்சம் வித்தியாசமாக செயல்படுகிறது.அதாவது நீங்கள் உறுப்பினராதும் ரேண்டமாக இன்னொரு உறுப்பினரின் ப்ரொபைல் தரப்படும் நீங்கள் பேசிக்கொள்ளலாம் நான்கு நாட்களுக்குள் அவருடன் நட்பு வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என முடிவு செய்து கொண்டதும் அடுத்த ரேண்டம் நபரின் ப்ரொபைல் தரப்படும்.அவ்வளவே விஷயம் ஆன்லைன் நட்பு தளம் என்றாலே அப்டி இப்டி தான் ட்ரை பண்றது இதெல்லாம் சரிப்படுமா?

Categories:

கூகிளின் free mail id for your domain

இன்னும் பீட்டாவுக்கு கூட வரவில்லை,கூகிள் உங்கள் டொமைன் பெயருக்கு மின்னஞ்சல் சேவை வழங்கும் திட்டம்.அதாவது gokul@iniyathalam.com மாதிரி ஆனால் .blogspot வந்தால் தருவார்களா என்று தெரியவில்லை.காரணம் இதில் பங்கு பெற உங்களுக்கு சொந்தமாக ஒரு யுஆர்எல் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.அப்படி என்றாலும் கவலை வேண்டாம் ஒரு url வெறும் 350 தான் அதுவும் வருடத்திற்கு.

ஆனால் ஒரு வெப் டிசைனராக இதை பெரிதும் வரவேற்கிறேன் காரணம் இதுவரை க்ளையண்ட்களுக்கு 5-10 மின்னஞ்சல்கள் தான் தரமுடிந்தது இனி எத்தனை வேண்டுமானால் தரலாம் அதுவும் இலவசமாக மட்டுமில்லாமல் தளத்தின் ஸ்பேஸை மெயில் அக்கவுண்ட்டொடு பகிரத்தேவை இருக்காது என்றால் கசக்குமா என்ன?

பதிவு செய்து கொள்ளுங்கள் இப்போதே.

Categories: ,

வீடியோ தேடு தளம்

புகழ்பெற்ற வீடியோ தளங்களில் தேட வசதியாக இத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.இங்கு Google,yahoo,ifilm மற்றும் youtube ஆகியவற்றிலிருந்து தேட முடியும்.உறுப்பினராகும் வசதியும் உண்டு.மற்ற இசை போன்ற தேடுதல் வசதிகளும் உண்டு

அப்டேட்: யாஹீ திரும்பவும் வீடியோ சேவையைத் தொடங்கி இருக்கிறது எனக்கு பிடித்து விட்டது காரணம் கூகிள்,யூட்யூப் இரண்டுமே என் வீடியோவை எப்படி (கேலி) செய்திருக்கின்றன பாருங்கள்:

யூட்யூப் வீடியோ



யாஹீ அல்லது இங்கே க்ளிக்குங்கள்



ஏனென்றே தெரியவில்லை google,youtube இவை இரண்டிலும் வேகமாக ஓடுகிறது.


Categories: ,