தினமும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நிறைய தளங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக சிறப்பாக செயல்படும் தளம் என்று இதை சொல்லலாம், கான்செப்ட் கொஞ்சம் சிக்கலானது தான். அதாவது இணையத்தில் நிறைய செய்திகளை நிறைய செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடமும் தந்து கொண்டேயிருக்கின்றன. உதாரணத்திற்கு BBC முப்பது செய்திகளை அடுத்த ஒரு மணி நேரத்தில் இடுகிறது என வைத்துக் கொள்வோம். அதன் Editor அவற்றுள் முக்கியமானது என கருதும் மூன்றை highlight செய்யலாம் ஆனால் அதில் உங்களுக்கு பிடித்தமான அல்லது தேவையான செய்தி வேறாக இருக்கலாம். இத்தளம் என்ன செய்கிறதென்றால் அந்த முப்பதையும் காட்டும், அவற்றை உங்களையொத்த ரசனையுள்ள பார்வையாளர்கள் மதிப்பிட உங்கள் ரசனைக்கேற்ற Editing நிகழ்ந்து விடும்.
Voting, Commenting போன்ற வசதிகளும் உண்டு. நீங்கள் வேறு இடத்தில் காணும் செய்தியை தரலாம். உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் நீங்களே செய்திகளை தர ஆரம்பிக்கலாம், உங்களுக்கென்று தனி பக்கம் தருகிறார்கள் வலைப்பூ மாதிரி, அதில் வரும் விளம்பர லாபம் 90% உங்களுக்கே.

ஆன்லைன் சீரியல் (சரியான மொழி்பெயர்ப்பை கமெண்ட் இடலாம்)


இணைய முன்னேற்றத்தின் வேகத்திற்கேற்ப இந்திய நிறுவனங்களும் திறமையிலும், தொழில் நுட்பத்திலும் ஈடு கொடுக்கின்றன. அதற்கு இத்தளம் ஒரு உதாரணம், இணையத்தில் மூன்று நிமிட தொடர் என்பதே ஒரு நல்ல கான்செப்ட். அதையும் குட்டி குட்டி துணுக்குகளாக தந்திருக்கிறார்கள். ராம் என்கிற சென்னை இளைஞனுக்கும் அவன் மனைவி ரியா என்கிற மும்பை பெண்ணுக்கும் இடையிலான வாக்குவாதங்கள் தான் கதை.

இரண்டே இரண்டு கேரக்டர்கள், எளிமையான இசை என்று இயல்பாக வடிவமைக்கப்பட்ட தளம். Youtube மாதிரி பெரிய போட்டியாளர்கள் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை.

சில எபிசோட்கள் போர் தான் என்றாலும் பொழுது போக்க ஏற்ற தளம். பார்வையாளர்களின் கதைகளை படமாக்குவது, எபிசோட்களுக்கு கதை எழுத ஊக்குவிப்பது மாதிரி ஏதாவது முயற்சிக்கலாம். Youtube மாதிரி வலைப்பூக்களில் க்ளிப்களை இணைக்க வழிவகை செய்யலாம்.

எளிமை தான் முக்கியமானது, மூன்று நிமிடம் பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம், சீக்கிரம் வீடியோ பதிவிறங்குகிறது, மெம்பராக பதிவு செய்யும் தொல்லையில்லை.

அதிகமாக மார்கெட்டிங் ஏதும் செய்யவில்லை போலிருக்கிறது, Google ல் போட்டால் இத்தளமே
(வரவே) வரவில்லை.

ஓர்குட் ரகசியங்கள்


நாம் ஆர்குட் என்றே உச்சரிக்கிறோம் கூகிள் ஓர்குட் என்கிறது. இதில் இளைய சமுதாயம் மதி மயங்கி கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தடை போடுமளவுக்கு வந்து விட்டது. இத்தளத்தில் தெரிந்தவர்களோடு பேச மட்டும் என்கிற நிலை மாறி புதிதாக நட்பு பாராட்ட (நம்புவோம்) என்பதற்காகவே நிறைய நேரம் உலவுகிறார்கள்.

அந்த நேரத்தை எளிதாகவும், பயனுள்ளதாகவும் மிச்சப்படுத்த இத்தளம் உதவுகிறது. உதாரணத்திற்கு புதிய புதிய ட்ரிக்குகள், ஸ்கிராப் அனுப்பும் வழிகள் என நிறைய. உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் Fan ஆக, "எல்லோருக்கும் ஸ்கிராப் அனுப்ப" என்கிற ஸ்கிராப் ஆர்குட் உபயோகிக்கும் எல்லோருக்கும் வந்திருக்கும் அதை அவ்விளம்பரமின்றியே உபயோகிக்கலாம், ஆயிரம் பேருக்கு Friend Request தரும் மென்பொருள் என நிறைய எளிய வழிமுறைகளை காண உதவுகிறது

மேலும் இத்தளத்தில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் வழிமுறைகள் பெரும்பாலும் வைரஸ் தொல்லையின்றி இருப்பதால் ஜாவா ஸ்கிரிப்டுகளை தைரியமாக இயக்கலாம். சமீபத்தில் தான் தளத்தை நிறைய மேம்படுத்தி இருக்கிறார்கள்.

சும்மா இருக்கும்போது கொறிக்கவும், புதிதாக முயற்சிப்பவர்களுக்கும் ஏற்ற தளம்