20000£ வெல்லுங்கள்

அது மொத்தம் எவ்வளவு என்று கணக்கு போட என்னால் ஆகாது.ஆனால் ஜெயிப்பது மிக எளிது, போட்டு கொடுப்பது, கோள் மூட்டுவது மாதிரியான வேலை தான். BSA என்கிற நிறுவனம் தான் இதை செய்தியாக அறிவித்திருக்கிறது.எங்கே போய் எப்படி விண்ணப்பிப்பது என்பது வரை விளக்கியிருக்கிறார்கள்.நமக்கு ஜெயிப்பது கஷ்டமில்லை இந்தியாவில் பாதிக்கு மேல் பைரஸி தானே விளையாடுகிறது...

Categories:

தள்ளிப்போடுவதை தவிர்க்க புத்தகம்

wikiயிலிருந்து தள்ளிப்போடுவதை தடுக்க புத்தகம் தொகுத்திருக்கிறார்கள், ஏற்கனவே நிறையவே அறிவுரைகளை கேட்டிருந்தாலும் இங்கே மொத்தமாக அழகாக தொகுத்திருக்கிறார்கள்.சகல விதத்திலும் ஆராய்ந்து போட்டிருக்கிறார்கள், ப்ரிண்ட் செய்தோ பதிவிறக்கம் செய்தோ பார்க்கவும்... அவ்வளவு பெரிய புத்தகமல்ல, சேமித்துக் கொள்வது பயனளிக்கும் அல்லவா.

Categories:

கூகிள் 'ஃப்ளேவர்டு' தேடுதல்

உங்கள் தளத்தில் கூகிளின் தேடுதல் வசதி ஏற்படுத்தி இருந்தால் இப்புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். Flavored search என்ற புதிய நுட்பத்தை கூகிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதன் மூலம் உங்கள் தளத்தில் தேடுதலில் கிடைக்கும் (காட்டப்படும்) முடிவுகள் உங்கள் தளத்திற்கு சம்பந்தப்பட்டதாக காட்டப்படும்.உங்களது இசை சம்பந்தப்பட்ட தளம் எனில் தேடுதல் விடைகளில் இசை சம்பந்தப்பட்ட தளங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.இந்த நுட்பம் ஒரே நாளில் செயல்படுத்தப்படாது... உங்கள் தளத்தை பொறுமையாக தானியங்கியாக ஆராய்ந்து செயல்படுத்தப்படும்.

Categories: ,

உங்கள் இமேஜ்களை மேலும் அழகாக்க


உங்கள் புகைப்படங்களை சேமிக்க நிறைய தளங்கள் உண்டு அவற்றில் இத்தளம் சற்றே வித்தியாசமானது.இங்கே புகைப்படங்களின் வலைப்பூ சொந்தமாக உருவாக்கலாம்.உங்கள் புகைப்படங்களுக்கு ஸ்டிக்கர், பேக்ரவுண்ட், கமெண்ட் வசதி ஆகியவற்றை செய்ய முடியும்.அவ்வப்போதான அப்டேட்களை மின்னஞ்சல் மற்றும் RSS மூலமாக சொல்ல முடியும்.நீங்கள் டிசைனராக இருந்தால் புது டிசைன் கேட்கிறார்கள் ஜெயிப்போருக்கு 1000 டாலர் தருகிறார்கள், கலந்து கொள்ளவும்...வாழ்த்துக்கள்.

Categories:

உங்கள் வலைப்பூ அழிக்கப்படுமா

சமீபத்தில் வலை நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ப்ளாக்கர் ரோபோக்கள் நம் வலைப்பதிவை அழித்து விடும் வாய்ப்பிருப்பதாகக் கூறியிருந்தார்.அது உண்மை என்பதும் அவ்வளவு சீரியஸான பிரச்னை என்பதும் அப்போது தான் எனக்கு தெரியும்.அது பற்றி இன்னொரு நண்பர் எழுதிய வலைப்பதிவையும் காட்டி இருந்தார், மிக மிக நன்றி இருவருக்கும்.



வலைப்பதின் போது "word verification" வந்தால் ரோபோக்கள் உங்களை கண்காணிப்பதாகத் தான் அர்த்தம் எனினும் நான் எதிர்பார்த்தது போலவே கண்ணை மூடிக்கொண்டு ப்ளாக்கர் எல்லா வலைப்பூக்களையும் அழிப்பதில்லை. சரி இதை தடுக்க வழி? தேடிய வரை ப்ளாக்கரிடம் சரணடைவது தான், "word verification" என்னும் எழுத்துகளுக்கு அருகிலேயே ஒரு கேள்விக்குறி பட்டன் இருக்கிறதா? அதை க்ளிக் செய்யுங்கள் வரும் பக்கத்தில் இருக்கும் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள் இரு வேலை நாட்களுக்குள் (உங்களுடையது ஸ்பேம் ப்ளாக் இல்லையென்றால்) நல்ல பதிலை எதிர்பார்க்கலாம்.

சந்தேகமா...? என் வலைப்பூவுக்கு இதை செய்து விட்டேன் ப்ளாக்கரும் ஆராய்ந்து ஸ்பேம் இல்லை எனவும் மன்னிக்க சொல்லியும் மின்னஞ்சல் செய்து விட்டது (பார்க்க: படம்) பாவம்...னு மன்னிச்சுட்டேன்.






Categories: ,,

வீடியோ சேவை தளம்


வீடியோ சேவைக்கான தளங்கள் புதிது புதிதாக முளைக்க ஆரம்பித்து விட்டன, போட்டி அதிகமாகும்போது சலுகைகளும் அதிகமாகும் தானே (தேர்தல் ஜீரம் கண்டுக்காதீங்க) அப்படி கொஞ்சம் நிறைவாக இருக்கும் மற்றொரு தளம் இது.உங்கள் சொந்த வீடியோ தயாரிக்கலாம், பிரைவேட்டாகவோ, பப்ளிக்காகவோ தரலாம், உங்கள் தளங்களில் வெளியிடலாம்.மற்றும் அளவில்லாத பதிவேற்ற இறக்கங்கள் இன்னும் நிறைய உண்டு.எல்லாவற்றையும் விட அவர்களின் காமெடி வீடியோவை பாருங்கள், எப்படியெல்லாம் மார்க்கெட்டிங் செய்கிறார்கள்?

Categories:

ஆன்லைனில் ஸ்பெல் செக்



சட்டென்று இதை செய்ய எம் எஸ் வேர்டு போகாமல் இத்தளத்தை புக் மார்க் செய்து கொள்ளலாம்.(28 மொழிகளில் செய்து கொள்ளலாம் - இவ்வசதி நமக்கு உதவாது).இந்த ஸ்கிரிப்ட்டை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம், இலவசமாக உங்கள் தளத்தில் உபயோகித்துக் கொள்ளலாம்.

இன்னொரு டிப்ஸ் எனக்கு ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு வார்த்தை சந்தேகம் வந்து டிக்ஷனரியிலும் புரியவில்லையென்றால் கூகிள் இமேஜஸில் தேடுவேன் பெரும்பாலும் எளிதில் புரியும்

Categories:

முழு தளத்தையும் பதிவிறக்கம் செய்ய


சமீபத்தில் ஒரு நண்பர் அனுப்பிய மெயிலில் ப்ளாக்கர் நம் வலைப்பதிவை மொத்தமாக அழித்து விட வாய்ப்பு உள்ளது என கூறியிருந்தார் அதற்கு மாற்று வழி தேடுகிறேன் எனினும் நம் தளத்தை ஒரு பேக்‌ அப் எடுத்துக்கொள்வதும் நல்லதே உங்கள் தளத்தையோ அல்லது நீங்கள் விரும்பும் மற்ற தளங்களையோ முழுமையாக பதிவிறக்கம் செய்து ஆப்லைனில் காண இந்த மென்பொருள் உதவுகிறது.மற்றும் அவ்வப்போது நீங்கள் புது கன்டென்ட்டை அப்டேட் செய்து கொள்ளவும் முடியும்.

Categories:

உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் எப்படிப்பட்டவர் என நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது சரியா என அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ள பர்ஸனாலிட்டி டெஸ்ட்கள் உதவுகின்றன, அப்படி ஒரு தளம் தான் இது. நிறைய பரீட்சைகள் இருக்கின்றன ஒவ்வொன்றும் 10லிருந்து 15 நிமிடம் எடுத்துக்கொள்ளும் சும்மா இருக்கும்போது செய்து பார்க்கலாம்.

Categories:

உங்கள் தளத்தில் இருப்போரை காண


உங்கள் வலைப்பூவில் தற்போது ஆன்லைனில் இருப்போரை காணவும் பேசவும் இத்தளம் உதவுகிறது.என் தளத்தின் கீழே ஸ்க்ரோல் பண்ணவும் ஃபுட்டருக்கே மேலே ஒரு பாக்ஸ் தெரிகிறதா அது தான்.நீங்களும் இத்தளத்தில் பதிந்து கொண்டு என் தளத்தை பார்த்தால் உங்கள் ப்ரொபைலும் தெரியும்.உங்கள் தளத்தில் இருப்போரை மட்டும் காட்டலாம் அல்லது மற்றவர்களின் தளங்களில் இருப்போரையும் காட்டலாம் என ஆப்ஷனும் உண்டு.எதிர்காலத்தில் இன்னமும் நல்ல அப்டேட் வரும் என்கிறார்கள்

Categories:

உங்கள் புகைப்படங்களை 360ல் காண



அதாவது கார் மாதிரியான பொருட்களின் தளங்களை பார்த்திருந்தீர்களானால் கார் 3டி மாடல் இருக்கும் அதை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம்.கிட்டத்தட்ட அப்படி ஒரு ஐடியா தான் இது

இங்கு நீங்கள் உங்கள் வீட்டை காட்ட விரும்பினால் அதை சுமார் 26 போட்டோ எடுத்துக்கொண்டு பதிவேற்றம் செய்து 3டி போல காட்டலாம், ஷங்கர் படத்தில் செய்வாரே அது போல.அவர்கள் தந்திருக்கும் உதாரண பட லிங்க்களை க்ளிக் செய்து பாருங்கள் உங்களுக்கே ஆர்வம் வரும் இதை வலைப்பூக்களிலும் நீங்கள் வெளியிட முடியும் மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்

Categories:

ஆஃப் லைனில் தளங்களை சேமிக்க

நிறைய தகவல் உள்ள தளங்களை பொறுமையாக படிக்க நேரமில்லை மற்றும் இணையத்தை செலவு செய்ய விருப்பமில்லை என்பவர்களுக்காக இத்தளம். இங்கு தரும் செயலியை பதிவிறக்கம் செய்து கொஞ்சம் அலைந்து பார்க்கவும்.உங்கள் சேமித்த தளங்களில் தேடிப் பார்க்கவும் முடியும்.மற்றும் நீங்கள் ஆன்லைன் வரும்போது அந்த தளங்களின் தகவல்கள் அப்டேட் செய்யப்படும், புதிய தகவல்கள் சேர்க்கப்படும் நீங்கள் சொல்லாமலே.

Categories: ,

கணிணியை ரிமோட் அக்ஸெஸ் செய்ய


உங்கள் கணிணி கோப்புகளை (ஃபைல்) செல்பேசியிலிருந்தோ வேறொரு சிஸ்டத்திலிருந்தோ எடுக்க இத்தளம்
உதவுகிறது.முதலில் இதிலிருந்து ஒரு ஸாஃப்ட்வேரை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் மற்றும் ஆன்லைனில் இருக்க வேண்டும் அவ்வளவே... பாதுகாப்புக்கு குறைவில்லை என்கிறார்கள் மேலும் நீங்கள் எந்த கோப்பையும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை மல்டிபிள் சிஸ்டம் அக்ஸெஸ்ம் உண்டு மற்றும் இது வின்டோஸ் (ஜன்னல்கள் ஹி ஹி) கணிணிகளுக்கு மட்டுமே பொருந்தும்

Categories: ,

ஆன்லைனில் புகைப்படம் எடிட் செய்ய



வலைப்பதிவுகளில் இமேஜ் வைப்பது வாசகருக்கு மேலும் படிக்க உற்சாகமூட்டும் விஷயம். நீங்கள் இப்படி ஒரு அருமையான இமேஜை சேர்க்க விரும்பும்போது அது இன்னும் கொஞ்சம் மாற்றப்பட்டிருந்தால் நன்றாக இருக்குமே என விரும்புபவர்கள் மற்றும் இதற்காக போட்டோஷாப் பதிவிறக்கம் செய்ய விரும்பாதவர்கள் இவர்களுக்காகத் தான் இத்தளம் இங்கே அடிப்படை வசதிகள் எல்லாமே உண்டு அதே போல் பெரிய டிசைனர் தான் வேலை செய்ய முடியும் என்றில்லாமல் மிக எளிய நேவிகேஷன் நிச்சயம் உங்களை கவரும்


Categories:

தினசரி முன்னேற்ற செயலி

டாஸ்க் மேனேஜர்னே சொல்லியிருக்கலாமோ) அருமையான செயலி தினசரி வேலைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ள விரும்புவோருக்கு நிச்சயம் உபயோகாப்படும் யுனிகோட் சப்போர்ட் ஆகாது என்றே நினக்கிறேன், நிறைய வசதிகள் உண்டு மற்ற இதே போன்ற செயலிகளை விட

Categories: ,,

பிடித்தமான தளங்களை காண வித்தியாசமான மென்பொருள்



இத்தளத்தில் கிடைக்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தமான தளங்களை ஆர்கனைஸ் செய்து கொள்ள நிறைய சாய்ஸ்கள் உண்டு இதனோடே வருகிற பிரவுசரிலோ அல்லது உங்கள் டீஃபால்ட் பிரவுசரிலோ பார்க்கலாம் எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை என நீங்கள் கருதினால் வீடியோ டெமோ அல்லது பதிவிறக்கம் செய்து உபயோகித்து பார்க்கவும்

Categories: ,

உங்களுக்கென்று ஒரு இலவச டேட்டாபேஸ்

இங்கே ஆன்லைனில் உங்களுக்கென்று ஒரு டேட்டாபேஸ் உருவாக்கிகொள்ளலாம்.பதிவு செய்யத் தேவையில்லை.உங்கள் டேட்டாபேஸ்சை அடைய ஒரு ரகசிய தள முகவரி அளிக்கப்படும். அவ்வளவே.மேப், க்ராப் என பல வழிகளில் பார்க்கலாம்.புக்மார்க்லெட்,ஃபீட் என நிறைய வசதிகளும் உண்டு.


Categories: