ஆன்லைன் ரசீது தளம்



Web 2.0 வின் முக்கியமான தகுதியான எளிமை இத்தளத்தை பயன்படுத்த ஈர்க்கிறது. உறுப்பினரானதும் உங்கள் நிறுவன லோகோ இன்னபிற அத்தியாவசிய தகவல்கள் தருவது முதல் வேலை, இது ஒரே தடவை தான்.

அப்புறம் க்ளையன்ட் தகவல்கள், அடுத்து பில்லில் வரப்போகும் ஒவ்வொரு பொருளைப் பற்றிய தகவல், விலை விவரம் தந்தால் உங்கள் பில் தயார்.
உங்கள் வாடிக்கையாளர் மின்னஞ்சலுக்கும் அனுப்பும் வசதி உள்ளது.

நிறைய தளங்கள் யு.எஸ் தவிர மற்றவர்களுக்கு வசதிகளை தராது (என்னை வெறுப்பேற்றும் இடம் இது), ஆனால் இத்தளத்தில் இந்திய ரூபாயிலும் பில் போட முடிகிறது.


சிறு தொழில் முனைவோருக்கு உபயோகமான தளம்.

பெட்டி சேவை (Widget) வழங்கும் தளம்


வலைப்பூவிற்கு வரும் நண்பர்களை வரவேற்க தளத்தின் இரு பக்கமும் நிறைய பெட்டி சேவைகளை வழங்குவீர்கள். அது போன்ற அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வைத்திருக்கிறது இத்தளம்

பெட்டி சேவைகள் அதிகம், உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்ய தேடுதல் வசதியும் தருகிறார்கள்.

அதற்காக தளத்தையும் ஏகப்பட்ட பெட்டிகளால் நிரப்ப வேண்டாம், அது படிப்போருக்கும் தொந்தரவாகவே அமையும்.

Tell-a-friend சேவை

உங்கள் தளத்தை காண்போர் அதை அவர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து தர இத்தளம் உதவுகிறது.  இதைப் போல நிறைய தளங்கள் இருப்பினும் அதிக வசதிகளால் அவற்றை பின்னுக்குத் தள்ளுகிறது.


 உதாரணத்திற்கு Gmail, Yahoo, Aim மற்றும் MSN ஆகிய மின்னஞ்சல் சேவைகள் மற்றும் blogger, wordpress அனைத்திலும் அனுப்ப முடியும். செயல்பாடு பற்றி காண இந்த பதிவின் மேல் உள்ள tell-a-friend ஐ க்ளிக்கவும்.

 இதிலேயே Express என்கிற வசதியும் உண்டு. அதாவது அத்தளத்தில் போய் உறுப்பினராக பதிவு செய்ய தேவையில்லை. இருக்கும் Code ஐ மட்டும் நம் தளத்தில் போட்டால் போதும்.

இணையத்தில் பணம் சம்பாதிக்க


புத்தகம் எழுதுவதிலோ, ஃபோட்டோக்ராஃபி, இசை, மென்பொருள் எழுதுவதிலோ இன்ன பிற படைப்புத்திறன் வாய்ந்தவராக இருந்தால் இத்தளம் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். விற்பனையில் 80 முதல் 90 சதவீதம் உங்களுக்கே கிடைக்கும். மற்றும் விற்பதற்கு தேவையான அனைத்து டூல்களையும் இலவசமாக (அ) குறைந்த செலவில் உபயோகித்துக்கொள்ளலாம். எதையும் ஒரு வாய்ப்பாக நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமே. தயக்கமிருந்தால் Top Seller போய் பாருங்கள்... தமிழ் பெயர் அன்பர் நான்காம் இடத்தில் இருக்கிறார். Tattoo புத்தகங்களெல்லாம் சேல்ஸில் கலக்குகின்றன. நான் கூட புத்தகம் எழுத யோசிக்கிறேன். மெகா சீரியல் நண்பர்கள், அனுபவசாலிகள், ஓய்வு பெற்றோர், வாய்ப்புக்காக காத்திருப்போர் எல்லோருக்கும் அழகான 'மாத்தி யோசி'.

தினமும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நிறைய தளங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக சிறப்பாக செயல்படும் தளம் என்று இதை சொல்லலாம், கான்செப்ட் கொஞ்சம் சிக்கலானது தான். அதாவது இணையத்தில் நிறைய செய்திகளை நிறைய செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடமும் தந்து கொண்டேயிருக்கின்றன. உதாரணத்திற்கு BBC முப்பது செய்திகளை அடுத்த ஒரு மணி நேரத்தில் இடுகிறது என வைத்துக் கொள்வோம். அதன் Editor அவற்றுள் முக்கியமானது என கருதும் மூன்றை highlight செய்யலாம் ஆனால் அதில் உங்களுக்கு பிடித்தமான அல்லது தேவையான செய்தி வேறாக இருக்கலாம். இத்தளம் என்ன செய்கிறதென்றால் அந்த முப்பதையும் காட்டும், அவற்றை உங்களையொத்த ரசனையுள்ள பார்வையாளர்கள் மதிப்பிட உங்கள் ரசனைக்கேற்ற Editing நிகழ்ந்து விடும்.
Voting, Commenting போன்ற வசதிகளும் உண்டு. நீங்கள் வேறு இடத்தில் காணும் செய்தியை தரலாம். உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் நீங்களே செய்திகளை தர ஆரம்பிக்கலாம், உங்களுக்கென்று தனி பக்கம் தருகிறார்கள் வலைப்பூ மாதிரி, அதில் வரும் விளம்பர லாபம் 90% உங்களுக்கே.

ஆன்லைன் சீரியல் (சரியான மொழி்பெயர்ப்பை கமெண்ட் இடலாம்)


இணைய முன்னேற்றத்தின் வேகத்திற்கேற்ப இந்திய நிறுவனங்களும் திறமையிலும், தொழில் நுட்பத்திலும் ஈடு கொடுக்கின்றன. அதற்கு இத்தளம் ஒரு உதாரணம், இணையத்தில் மூன்று நிமிட தொடர் என்பதே ஒரு நல்ல கான்செப்ட். அதையும் குட்டி குட்டி துணுக்குகளாக தந்திருக்கிறார்கள். ராம் என்கிற சென்னை இளைஞனுக்கும் அவன் மனைவி ரியா என்கிற மும்பை பெண்ணுக்கும் இடையிலான வாக்குவாதங்கள் தான் கதை.

இரண்டே இரண்டு கேரக்டர்கள், எளிமையான இசை என்று இயல்பாக வடிவமைக்கப்பட்ட தளம். Youtube மாதிரி பெரிய போட்டியாளர்கள் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை.

சில எபிசோட்கள் போர் தான் என்றாலும் பொழுது போக்க ஏற்ற தளம். பார்வையாளர்களின் கதைகளை படமாக்குவது, எபிசோட்களுக்கு கதை எழுத ஊக்குவிப்பது மாதிரி ஏதாவது முயற்சிக்கலாம். Youtube மாதிரி வலைப்பூக்களில் க்ளிப்களை இணைக்க வழிவகை செய்யலாம்.

எளிமை தான் முக்கியமானது, மூன்று நிமிடம் பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம், சீக்கிரம் வீடியோ பதிவிறங்குகிறது, மெம்பராக பதிவு செய்யும் தொல்லையில்லை.

அதிகமாக மார்கெட்டிங் ஏதும் செய்யவில்லை போலிருக்கிறது, Google ல் போட்டால் இத்தளமே
(வரவே) வரவில்லை.

ஓர்குட் ரகசியங்கள்


நாம் ஆர்குட் என்றே உச்சரிக்கிறோம் கூகிள் ஓர்குட் என்கிறது. இதில் இளைய சமுதாயம் மதி மயங்கி கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தடை போடுமளவுக்கு வந்து விட்டது. இத்தளத்தில் தெரிந்தவர்களோடு பேச மட்டும் என்கிற நிலை மாறி புதிதாக நட்பு பாராட்ட (நம்புவோம்) என்பதற்காகவே நிறைய நேரம் உலவுகிறார்கள்.

அந்த நேரத்தை எளிதாகவும், பயனுள்ளதாகவும் மிச்சப்படுத்த இத்தளம் உதவுகிறது. உதாரணத்திற்கு புதிய புதிய ட்ரிக்குகள், ஸ்கிராப் அனுப்பும் வழிகள் என நிறைய. உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் Fan ஆக, "எல்லோருக்கும் ஸ்கிராப் அனுப்ப" என்கிற ஸ்கிராப் ஆர்குட் உபயோகிக்கும் எல்லோருக்கும் வந்திருக்கும் அதை அவ்விளம்பரமின்றியே உபயோகிக்கலாம், ஆயிரம் பேருக்கு Friend Request தரும் மென்பொருள் என நிறைய எளிய வழிமுறைகளை காண உதவுகிறது

மேலும் இத்தளத்தில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் வழிமுறைகள் பெரும்பாலும் வைரஸ் தொல்லையின்றி இருப்பதால் ஜாவா ஸ்கிரிப்டுகளை தைரியமாக இயக்கலாம். சமீபத்தில் தான் தளத்தை நிறைய மேம்படுத்தி இருக்கிறார்கள்.

சும்மா இருக்கும்போது கொறிக்கவும், புதிதாக முயற்சிப்பவர்களுக்கும் ஏற்ற தளம்

gtalk, yahoo,msn அனைத்து aacount க்கும் ஒரே மெஸெஞ்சர்

பிரச்னை: Yahoo, gtalk, MSN இன்னும் என்னென்ன chat பண்ணும் மென் பொருட்கள் இருக்கிறதோ எல்லாவற்றிலும் account வைத்திருக்கிறேன். ஆனால் எல்லா மென் பொருட்களையும் ஒரே நேரத்தில் திறக்க கஷ்டமாக இருக்கிறது, கணிணியும் அதிக வேலை செய்கிறது, இணையமும் வீணாகிறது. இவை எல்லாவற்றையும் ஒரே மென்பொருள் வழங்குமா?

வழி 1

நீங்கள் இணைய மையம் எதற்காவது செல்கிறீர்கள், அங்கே யாஹீ மெஸெஞ்சர் ஏதும் இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் இந்த தளத்தை முயற்சியுங்கள். இங்கு சென்று அங்கிருக்கும் yahoo chat box ல் உங்கள் ஐடி, பாஸ்வேர்டு தந்தால் போதும்.

இந்த சேவை பிடித்துப் போனால் இதில் இலவசமாக ஒரு account ஆரம்பித்து அதில் தரப்படுகிற form ல் Yahoo, gtalk மற்றும் பல சேவைகளின் id, password களை கொடுத்தால் போதுமானது. அனைத்து chat நண்பர்களும் ஒரே இடத்தில் சேர்க்கப்படுவார்கள்.

வழி 2

உங்கள் இணைய வேகம் அவ்வளவாக இல்லை என்றால் மேற்சொன்ன தளம் விரைவில் load ஆகாது. ஆகவே இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இது மிக சிறப்பானதும் கூட. install செய்ததும் Add account என்பதில் போய் அனைத்து yahoo, gtalk, msn, etc account களையும் சேர்த்துக் கொள்ளவும்.


பி.கு: இரு வழிகளிலுமே ஒரே சேவையில் பல account களையும் சேர்க்க முடியும். உதாரணத்திற்கு yahoo வில் இரு account இருந்தால் இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம். இரு account நண்பர்களும் காட்டப்படுவார்கள்.

செல்பேசி மூலம் சிக்கன இணையம்

ப்ளாக் பெர்ரி மாதிரியான வேலையை அவ்வளவு பணம் கொடுக்காமலே செய்து முடியும். இந்தியாவில் செல்பேசி நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. படைப்புத்திறன் மிகுந்த இணைய நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வசதி ஒரு நாளைக்கு 20 ரூபாய் என்பதிலிருந்து மாதம் 375 ரூபாய் என நிறைய சிக்கனமான ப்ளான்களில் கிடைக்கிறது. செல்பேசி மூலமாக இணையத்தில் இணைத்துக் கொள்வது பல வழிகளில் பயனளிக்கும்.

1. நீங்கள் பயணத்திலிருக்கும்போது இணையத்தில் உலவ,
2. இணையம் தொடர்பு கொள்ள அருகில் வசதிகள் இல்லாத போதோ,
3. 24 மணி நேரமும் உங்கள் கையோடு இணையம்
4. சிறு சிறு வேலைகள் உதாரணத்திற்கு மின்னஞ்சல் பார்க்க, ப்ளாக் கமென்ட் பார்க்க, chat செய்ய‌
5. முக்கியமாக, உங்கள் வீட்டுக் கணிணியோடு செல்பேசியை modem ஆக இணைத்து எளிதாக குறைந்த விலையில் இணையத்தில் உலவ‌

நான் இப்படி தான் இணைத்துள்ளேன். பெரிய கோப்புகளை பதிவேற்ற முடியாது, மற்றபடி டாகுமென்ட் பதிவேற்றலாம். பதிவிறக்க தாமதமாகும், இது போல சில விஷயங்களுக்காக‌ சில மென்பொருட்களை உபயோகிக்க வேண்டும் (இப்பதிவிற்கு உள்ள வரவேற்பை பொறுத்து அவற்றையும் செல்பேசி மென்பொருட்களையும் பற்றிய விவரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன்).

எப்படி இணைப்பது

முதல் முறை செட் அப் செய்வது மட்டுமே கொஞ்சம் கோக்குமாக்கான வேலை. அதன் பிறகு பிரச்னையே கிடையாது.

தேவையானவை:

1. ஜாவா உள்ள ஒரு செல்பேசி (உங்கள் செல்பேசியில் பிரவுசர் இருக்கிறதா, அதை கணிணியோடு இணைக்க முடியுமா, USB கேபிள், PC Suite என்று ஏதாவது தந்திருக்கிறார்களா)
2.இணைய வசதி தருகிற ஒரு கனெக்ஷன் (Aircel ல் இணைய வசதி தரப்படுவதில்லை.)
3.கணிணியோடு இணையம் இணைக்க விரும்பினால் ஒரு கணிணி :)

(மற்ற மாநிலங்களில் ப்ளான்கள் பற்றி தெரியாது. சில நாள் காத்திருந்தால் சொல்வேன் ஏனென்றால் நான் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து பெங்களூரு செல்ல வாய்ப்புகள் உண்டு) முதலில் ஒரு நாளைக்கு மட்டும் இணைய வசதி தரக்கூடிய ப்ளான்கள் உண்டு Airtel, Vodafone இவற்றில் 20 ரூபாய் இருக்கும் internet e-charge என்று கேளுங்கள்.

உடனே உங்கள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். இந்த மாதிரி ஒருநாள் இணைய ப்ளான் போட்டதாக சொன்னால் அவர்கள் Mobile Office என்கிற ஒரு கோப்பினை உங்கள் செல்பேசிக்கு அனுப்புவார்கள். அதை இன்ஸ்டால் செய்யுங்கள். அப்புறம் Google போய் "உங்கள் செல்பேசி மாடல் எண்" wap என்று இட்டு தேடுங்கள்.

உதாரணத்திற்கு என்னுடைய செல்பேசி மாடல் Sony Ericsson Z530i, இதற்கு Google l போய் "530i wap" என்று இட்டால் சோனி எரிக்சன் நிறுவன தளம் ஒன்றும் காட்டப்படும். அதை க்ளிக்க அதில் என்னுடைய செல்பேசி எண், பெயர் இன்ன பிற விவரங்களை இட அத்தள சார்பில் என் செல்பேசிக்கு ஒரு கோப்பு அனுப்புவார்கள், அதை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை செல்பேசியை restart செய்ய வேண்டும்.

இப்போது browser ஒன்று செல்பேசியில் இருக்கிறதா, அதில் ஏதாவது URL அளித்து சோதிக்க வேண்டும். கனக்ட் ஆகவில்லையென்றால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை அழையுங்கள், அவரே பிரச்னையை சரி செய்து தருவார்.

கனெக்ட் ஆனதும் உங்கள் செல்பேசியை கணிணியோடு இணையுங்கள், USB Cable மூலம். உங்கள் PC Suite ஐ install செய்யுங்கள். அதில் Connect to internet அல்லது mobile connecting wizard என்கிற மாதிரி ஏதாவது இருக்கும். அதை அழுத்த சின்ன சின்ன விவரங்களை தர (தெரியாதவற்றை எதுவும் தராமல் விட்டு விடுங்கள்) இணையம் கணிணியோடு இணைக்கப்படும்.

YOUTUBE வீடியோ, அனைத்து Multimedia கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய‌

உங்களுக்குப் பிடித்தமான ஆனால் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்படாத flash, mp3, mpg, என பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிற அனைத்து கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய இயலும். YOUTUBE மட்டுமல்லாமல் எல்லா தளங்களிலும் உள்ள மல்டிமீடியா கோப்புகளையும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு நிறைய வழிகள் உண்டு.

ஆனால் இவை எல்லாமே அந்தந்த தள உரிமையாளரின் அனுமதி இல்லாது செய்யப்படுபவை தான், ஆகவே கவனமாக இருக்கவும்.

வழி 1

வீடியோ பதிவிறக்கம் தான் முக்கியம் என்றால் அதற்கென்றே நிறைய தளங்கள் உண்டு. இவைகளில் போய் அந்த URL ஐ அளித்தால் பதிவிறக்கம் தானே நிகழும்.

இத்தளத்தில் போய் URL ஐ அளித்து டவுண்லோடு என்பதை க்ளிக்கவும்.




மற்றும் இத்தளமும உபயோகமானதே





வழி 2

இப்படி பதிவிறக்க சில மென்பொருட்களும் உள்ளன. அவற்றில் கொஞ்சம் மேம்பட்ட மென்பொருள் இது. பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


வழி 3 (சிறந்ததும் கூட‌)

நீங்கள் Firefox உபயோகிப்பீர்களேயானால் இது உதவும்.
1. Firefox ப்ரவுசரில் இங்கே க்ளிக்கி வரும் விண்டோவில் இன்ஸ்டால் என்பதை க்ளிக்கவும்.

2. இன்ஸ்டால் ஆனதும் restart செய்யவும். இப்போது address bar பக்கத்தில் ஒரு குட்டி பந்து மாதிரி தெரியும்.

3. இப்போது எந்த கோப்பு வேண்டுமே அத்தளம் செல்லுங்கள், இப்போது அந்த பொம்மை சுழலும். அதன் மேல் கர்சர் கொண்டு போனால் ஒரு கீழ் நோக்கிய அம்புக்குறி தெரியும்.




4. அதை க்ளிக்க அத்தளத்தில் உள்ள பதிவிறக்கம் செய்ய முடிகிற எல்லா கோப்புகளும் காட்டப்படும்.தேவையானதை பதிவிறக்கிக் கொள்ளவும்.



அவ்வளவே. இதற்கப்புறம் எத்தனை முறை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட Youtube videos எல்லாம் .flv என்கிற extension ல் இருக்கும். அதைப் பார்க்க இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யலாம்.

இம்மென்பொருளை இன்ஸ்டால் செய்ததும் .flv உள்ள கோப்பின் மேல் வலது க்ளிக் செய்து Open with select செய்து Choose from lisட் போய் Riva player என்பதை க்ளிக்கவும். அப்படியே கீழே Always என்கிற வசதியையும் க்ளிக்கவும்.

இதிலேயே அதை வேறு format உதாரணத்திற்கு .mpg ஆக மாற்றவும் முடியும். start -> programs -> Riva encoder போய் input ல் உங்கள் .flv கோப்பினை அளித்து output ல் வேறு பெயரில் .mpg ஆக மாற்றி encode என்பதை க்ளிக்கினால் போதும். உங்களுக்கு தேவையான வீடியோ கிடைத்து விடும்.

உடல் நலத்தேடலுக்கான‌ ஒரு தளம்


உடம்பில் பிரச்னை வந்ததும் அது பற்றி ஏற்கனவே ஆராய்ச்சி செய்து விட்டு மருத்துவரிடம் (அரசியல் அல்ல ;) ) இன்ன இன்ன அறிகுறிகள், இந்த வியாதியோ என்று சொன்னால் கண்டிப்பாக திட்டுவார் தான். ஆனாலும் தெரிந்து கொள்வதில் தப்பில்லையே என எண்ணுவோருக்கு உதவுகிறது இத்தளம்.

இதன் சிறப்பு உங்கள் தேடலுக்கு உடல்நலம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே தரும். அது மட்டுமின்றி டயட், தினசரி உடற்பயிற்சி என தேடுதலுக்கும் உதவும்.

நம்மூரில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு தற்போது தான் அதிகரித்து வருகிறது. வருமுன் காப்பது நல்லது தானே.

பின் குறிப்பு: தேடுதலில் படிப்பவை தெரிந்து கொள்ள மட்டுமே. நீங்களாக மருந்து கொள்ள அல்ல (பின்றேன்ல‌). மருத்துவரை ஆலோசிக்கவும்.

ஒரு வரியில் கதை

"ஓங்கி ஒலிக்கும்
ஒவ்வொரு கெட்டி மேளச்
சத்தத்திலும் அடங்கிப் போகிறது
ஏதோ ஒரு விசும்பல் ஒலி"

விகடனில் படித்த எனக்குப் பிடித்தமான கவிதை, (வார்த்தை மாறாமல் இருக்கிறதா தெரியவில்லை).

இது போல ஒரு வரியில் சொல்லப்படுகிற கதைகளைத் தொகுக்கிறது இத்தளம்.
எல்லாமே சிறந்த கதைகள் என்று சொல்ல முடியாது. ஆனால் படைப்புத் திறன் சாதாரண மனிதர்களுக்கும் சாத்தியமானதே என்று உணர்த்தும் தளம். போரடிக்கும் நேரத்தில் கொறிக்கலாம்.



சில உதாரணங்கள்:

My husband's biggest fear is that I'm going to leave him for a woman or a black man.

I had no time to stop when the oncoming truck made a left turn.

"I can't give you my number because I'm in an exclusive uncommitted one year relationship with a man I see on the weekends," doesn't have a very convincing ring to it.

The Sick Girl - I used to consider one of my biggest talents to be pill-swallowing because I could swallow 8-13 medicines and supplements at a time.

சிறந்த கதைகளை மட்டுமே படிக்க விரும்பினால் Popular என்பதை க்ளிக்கவும்.

நீங்களும் கதை எழுதலாம், படைப்புத்திறனை வளர்க்க உதவும் தளம் (ஆங்கிலத்தில் ;)

தமிழில் இப்படி யாராவது ஆரம்பித்தால் நன்றாக இருக்குமில்லையா?

உங்கள் நிறுவனம் பற்றி அறிந்து கொள்ள


இந்தியாவில் மனித வளம் அதிகமாக இருப்பதால் அதை ஈர்க்கும் வகையிலான தளங்கள் உருவாகி வருகின்றன. அவற்றில் இந்தியரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு Start up தான் இத்தளம். இங்கே நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் பற்றி (உங்களை பற்றிய தகவல்களை சொல்லாமல்) நீங்கள் விமர்சனம் செய்யலாம். இது அந்த நிறுவனத்திற்கு தன் குறை நிறைகளை அறியவும், புதிதாக சேர விரும்புகிறவர்களுக்கு உபயோகமாகவும் இருக்கும். அதே போல நீங்களும் உங்கள் நிறுவனம் பற்றி மற்றவர்கள் கருத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது இத்தளம்.

நல்ல ஐடியா. ஆனால் இன்னும் அதிக விளம்பரமும் நிறைய விமர்சனங்களும் தேவை. சில பெரிய நிறுவனங்கள் பற்றி கூட யாருமே விமர்சிக்கவில்லை. தளத்தை இன்னும் Aggressive ஆக Market செய்தால் நன்றாக இருக்கும்.

தொழில் முறை நட்பை வலுப்படுத்த ஒரு தளம்


நம்மில் பலர் வேலை செய்யுமிடத்தில் கிடைக்கும் நண்பர்கள், உயர் அதிகாரிகளோடு தொடர்பில் இருப்பதில்லை. அது மட்டுமின்றி நண்பர்கள் வேலை செய்யுமிடத்தில் ஒரு வாய்ப்பு இருக்கும்போது அது தெரியாமல் போய் விடவும் வாய்ப்பிருக்கிறது. இந்த இடைவெளியை நிரப்புவது தான் இத்தளம்


நட்பு வட்டம் மட்டுமின்றி Jobs பகுதியில் புதிய உலகளாவிய வேலை வாய்ப்புகளை தேடலாம்। Answers பகுதியில் உங்கள் Skill set ஐ பொறுத்து சந்தேகங்களுக்கு நீங்கள் பதில் கூறலாம். இதன் மூலம் வேலை தருவோர் உங்கள் அறிவை எளிதாக புரிந்து கொள்வார்.

இன்னும் Recommendations, groups, community, mail என நிறைய வசதிகள் உண்டு।

அவசரப்பட்டு ஓர்குட் மாதிரி பரபர என்று Friend Request தந்து விட வேண்டாம்... Spam control அதிகம். நிறைய பேர் உங்களை தெரியாது என்று சொல்லி விட்டால் அப்புறம் நீங்கள் மின்னஞ்சல் செய்தால் தான் தடையை நீக்குவார்கள்.

ஆர்குட் நண்பர்கள் அனைவருக்கும் scrap அனுப்ப (NO ADS)

ஓர்குட் (இப்படி தான் உச்சரிக்க வேண்டுமென்கிறது கூகிள்) தளத்தில் ஏகப்பட்ட scrap உங்களுக்கு வந்திருக்கலாம். ஒவ்வொரு scrapக்கும் கீழே இதே போல அனுப்ப நீங்களும் so & so communityயில் சேருங்கள் என்று எழுதியிருக்கும். இந்த விளம்பரம் இல்லாமலே எல்லோருக்கும் நீங்கள் scrap அனுப்ப முடியும்.

கொஞ்சம் வேலை பார்க்க வேண்டும்:

Firefox உலவியில் மட்டுமே இதை செய்ய முடியும்.

முதலில் இங்கே க்ளிக்கினால் ஒரு பெட்டி செய்தி வரும் அதில் install என்பதை க்ளிக்கவும்

பிறகு உலவியை ஒரு முறை restart செய்யவும்

இப்போது இங்கே க்ளிக்கவும்

வலது கீழ் மூலையில் installed என்று காட்டியதும் இங்கே க்ளிக்கவும்

சிறிது நேர காத்திருப்புக்கு பின் வரும் பக்கத்தில் உங்கள் scrap ஐ அடித்து send செய்தால் அவ்வளவே.

எச்சரிக்கை: ஓர்குட்டை பொறுத்தவரை இது Spam தான், எனவே குறைந்த பட்சமாக இரண்டு மணி நேரம் உங்களால் scrap பண்ண முடியாமல் போகலாம். அதிகபட்சமாக account disabலெ ஆகலாம் (இதுவரை அப்படி எதுவும் நிகழ்ந்ததாக தகவலில்லை). எல்லோரும் செய்து கொண்டு தானிருக்கிறார்கள். அளவாக உபயோகிக்கவும் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கில்.

PPTக்காகவே ஒரு தளம்


நிறைய பேருக்கு தெரிந்த தளம் தான்.இருப்பினும் அனைவருக்குமாக ஒருமுறை அறிமுகப்பதிவிடுகிறேன். நீங்கள் அடிக்கடிPresentation செய்பவராக இருந்தால் உங்களுக்கு இது மிகவும் உபயோகமான தளம். மற்றும Presentationனை காதலிப்பவராக இருப்பினும்.அது மட்டுமில்லை உங்களுக்கு தேவையான தலைப்புகளில் உபயோகமான செய்திகளை ஆக தெரிந்து கொள்ள நுனிப்புல் மேயலாம். Web 2.0 ல் அதிக விருதுகள் மற்றும் அதிகம் பேர் உபயோகிக்கும் தளம்.