Adsense பயன்படுத்துவது சட்ட விரோதம்

இதை எழுதவா வேண்டாமா என்றே யோசித்தேன், ஆனாலும் வேறு வழியில்லை.தமிழ் வலைப்பூக்களில் நீங்கள் Adsense பயன்படுத்துபவரானால் அதை இப்போதோ பொறுமையாகவோ எடுத்து விடவும்.காரணம் Adsense policy தெளிவாக சொல்வது இங்கே,
"
Language
The AdSense ad code for contextually-targeted ads may be placed on pages with content primarily in any of our supported languages. Ads must not be displayed on any page with content primarily in an unsupported language.
"

அதாவது மற்ற மொழிகளை முதன்மையானதாக கொண்ட தளங்களில் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.நான் பொறுமையாக ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இதற்கு மாற்று வழிகளும் உண்டு.
1.மற்ற இதே போன்ற புரோக்ராம்களில் இணைந்து கொள்ளுங்கள், உதாரணம் Adbrite.வேறு வகையான புரோக்ராம்களை விரைவில் எழுதுகிறேன்.
2.Adsense கண்டிப்பாக வேண்டுமென்றால் ஒரு ஆங்கில வலைப்பூ ஆரம்பியுங்கள்.

கூகிள் அனுமதிக்கும் வரை நாம் இப்படி செய்வது சட்ட விரோதமே.அறியாமையும் சட்டப்படி குற்றமே என்பதால் இங்கே இவற்றை எழுதினேன்.முழு விவரங்களுக்கு...

Categories:

13 comments:

said...

உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பயனுள்ள விஷயங்களை எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்

said...

அவசியமான தகவல் நண்பரே.. மிக்க நன்றி.

said...

தகவலுக்கு நன்றி நண்பரே. ஆனால் என்னால் இந்த google adsense-ஐப் புரிந்து கொள்ள முடியவில்லை. நானும் என்னுடைய வலைப்பதிவுகளில் google adsense-ஐ blogger மூலமாக முயற்சி செய்து பார்த்தேன். அவர்கள் unsupported language என்று பதில் கடிதம் அனுப்பிவிட்டார்கள். ஆனால் ஆங்கிலப் பதிவிற்கும் அதே unsupported language என்று தான் கூறியிருந்தார்கள். அப்படியிருக்க உங்களுக்கு எப்படி இந்த google adsense கிடைத்தது? இவ்வாறு google adsense கிடைக்காமலிருக்கவும், adbrite (உங்களைக் காப்பி அடித்தது தான்)விளம்பரங்களை பதித்தேன். ஆனால் அவர்களிடம் இருந்து இதுவரை ஒரு பைசா கூட வாங்கவில்லை. ஆனால் ஒரு முறை your earnings என்று $5 காட்டினார்கள். ஆனால் மறுவாரம் அந்த $5 டாலர் 1.8டாலராக மாறி இருந்தது. அதில் எப்படி பணம் பெறுவது என்றும் தெரியவில்லை. adbrite பற்றி உங்களிடம் ஒரு பதிவை எதிர்பார்க்கி(றோம்)றேன். மற்றபடி உங்கள் பதிவுகள் அனைத்துமே பயனுள்ளவையாக இருக்கிறது.

said...

நிலா,முருகாவுக்கு நன்றிகள் பல.

ஆல்பர்ட்டுக்கு
Adsense சுமார் பத்து மொழிகளை இப்போது சப்போர்ட் செய்கிறது, தேடலுக்கு இன்னும் சில மொழிகள்.

நாங்களெல்லாம் ஆரம்ப காலத்தில் ஒரு நண்பர் சொன்ன ஐடியா படி பேருக்கு ஒரு ஆங்கிலப்பதிவு ஆரம்பித்து அதன் கோடிங்கை தமிழ் தளங்களுக்கும் உபயோகித்தோம், (அவருக்கும் எங்களுக்கும் அப்போது Adsense policy-ஐ படிக்க வேண்டும் என்று தோன்றவே இல்லை மற்றபடி யார் மீதும் தவறெல்லாம் சொல்லவில்லை)
உங்கள் ஆங்கிலப்பதிவு ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என தெரியவில்லை.எந்த தமிழ் எழுத்தும் இல்லாது ஒரு முறை செய்து பாருங்கள் (சில சமயம் தமிழ் வலைப்பூ லிங்க்கை அப்படியே தந்திருக்கலாம்)

Adbriteல் 5$ஆ? எனக்கு இன்னமும் அவ்வளவெல்லாம் வரவில்லை.அதை விட குறைகிறது என்றால் ஒருவேளை இப்படி இருக்கலாம்.Earningsல் last 30 days என்பதை பார்க்காமல் விட்டிருப்பீர்கள், அதை All time என்ற ஆப்ஷனாக மாற்றி பாருங்கள்.

மொத்தமாக வலைப்பதிவுகள் மூலம் சம்பாதிக்கும் அனைத்து வழிகளையும் எழுதலாம் என்று ஒரு எண்ணம் உண்டு.ஆனால் "நானே அப்படி ஒன்றும் சம்பாதித்து சாதிக்கவில்லையே" என்ற தயக்கம் தான்.

said...

//(சில சமயம் தமிழ் வலைப்பூ லிங்க்கை அப்படியே தந்திருக்கலாம்)

சைட்பாரில் தருவோமே அதை குறிப்பிட்டேன்

said...

அன்பு நண்பரே,
இதுபோன்ற விளம்பரங்களைப் பயன்படுத்துவதானால், நமக்குத் தொலைபேசிக் கட்டணத்துக்காவது பணம் வருமா? இருந்தால் விவரமாக எழுதுங்கள். வழிகாட்டுங்கள்.

said...

ஞான வெட்டியானுக்கு
நிச்சயம் அதற்கு மேலும் பணம் வரும் ஆனால் தமிழ் வெப்சைட்களுக்கு வர வேண்டுமானால் சற்று அல்ல மிக அதிகமாகவே உழைக்க வேண்டும் இவை பற்றி விரைவில் ஒரு விளக்கமான பதிவிடுகிறேன்

said...

விரிவான விளக்கத்திற்கு நன்றி நண்பரே. அந்த $5 டாலர் எல்லாம் அங்க வருகிறவர்கள் கிளிக் பண்ணுவது கிடையாது. என்னுடைய நண்பர்களிடம் கொடித்து கிளிக் பண்ணச் சொன்னேன். $5 ல வந்து நின்ரது. ஆனால் ஒரு பைசா கூட இன்னும் வாங்கவில்லை என்பதால் நிறுத்திட்டாங்க. அதில் இருந்த iterest எல்லாம் போய்விட்டது.

said...

Dont worry albert and dont loose interest I show you how soon Its cool to do

said...

கோகுல்..

சிறிது நாட்களுக்கு முன் என் ப்ளாகரில் adsense தமிழில் இருந்தது ! விளம்பரங்கள் என்று ஆரம்பித்து இருந்தது.. பின் மறுபடியும் ஆங்கிலமாகிவிட்டது ..அநேகமாக கூடிய விரைவில் சப்போர்ட் எதிர் பார்க்கலாம் என நினைக்கிறேன்

said...

ஹாய் சுகா
இது ரொம்ப நல்ல விஷயம்
அப்படி நடந்தால் கலக்கலாம்

said...

நானும் Nhருக்கு ஓர் வலைப்திவு ஆங்கிலத்தில் nhடங்கி ர் அட் சீன் எடுத்தேன் அதில் 100 டொலர் Nர்ந்தவுடன் பி; கோட் அனுப்பினார்கள் கொஞ் ச நபளில செக அனுப்பு வார்களாம்

said...

நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்clicksor adbrite இல் இருந்து யாழிpருக்கும் நான் பணம் பெற முடியுமா? குகிழ் அட்டில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது நண்பருக்கு பின்கோட் அனுப்பிய பின்னும் சஸபெண்ட் பண்ணிவிட்டர்