அமெரிக்காவில் அப்பார்ட்மெண்ட்

அமெரிக்காவில் (மட்டுந்தான் என நினைக்கிறேன்) வீடு தேடுவது இப்போது வெகு சுலபமாகி விட்டது.ஷாப்பிங் தளம் போல இங்கு தேடலுக்கு ஒரு ஊரை குறிப்பிட்டு அதிலிருந்து எவ்வளவு தூரத்திற்குள்,படுக்கை,குளியலறைகள் எத்தனை வேண்டும், விலை ரேஞ்ச், செல்லப்பிராணிகள் அனுமதி உண்டா வரை சாய்ஸ் உண்டு, மற்ற வசதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.அருகில் மேப் ஒன்றும் காட்டப்படும்.நீங்கள் ஓனராக இருந்தால் அப்படியும் பதிவு செய்யலாம்.மற்ற நாட்டவர்கள் ஒரு ஜாலிக்கு போய் பார்க்கலாம், விரைவில் இந்தியாவிலும் இப்படி நடக்கலாம் இணையம் உபயோகிப்போர் விகிதம் முந்நூறு மடங்கு அதிகரித்துள்ளதாமே இந்தியாவில்.

Categories: ,

1 comments:

said...

வட அமெரிக்காவில் (அமெரிக்கா & கனடா) இணையம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.

நாங்கள் குடிபெயர்ந்தது, வீடு தேடியது, வேலை தேடியது போன்றவைகளை இணையத்தின் உதவியால் பாலைவனத்திலிருந்தே முடித்துவிட்டோம்.

உறவினர்கள் நண்பர்கள் இல்லாத ஊரில் வந்திருங்கியபோது , இணையத்தில் படங்களைப் பார்த்ததால் எதோ பழகிய ஊர் போலிருந்தது.

இணையத்தின் பயன் மிக அதிகம்