உங்கள் வலைப்பூ அழிக்கப்படுமா

சமீபத்தில் வலை நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ப்ளாக்கர் ரோபோக்கள் நம் வலைப்பதிவை அழித்து விடும் வாய்ப்பிருப்பதாகக் கூறியிருந்தார்.அது உண்மை என்பதும் அவ்வளவு சீரியஸான பிரச்னை என்பதும் அப்போது தான் எனக்கு தெரியும்.அது பற்றி இன்னொரு நண்பர் எழுதிய வலைப்பதிவையும் காட்டி இருந்தார், மிக மிக நன்றி இருவருக்கும்.



வலைப்பதின் போது "word verification" வந்தால் ரோபோக்கள் உங்களை கண்காணிப்பதாகத் தான் அர்த்தம் எனினும் நான் எதிர்பார்த்தது போலவே கண்ணை மூடிக்கொண்டு ப்ளாக்கர் எல்லா வலைப்பூக்களையும் அழிப்பதில்லை. சரி இதை தடுக்க வழி? தேடிய வரை ப்ளாக்கரிடம் சரணடைவது தான், "word verification" என்னும் எழுத்துகளுக்கு அருகிலேயே ஒரு கேள்விக்குறி பட்டன் இருக்கிறதா? அதை க்ளிக் செய்யுங்கள் வரும் பக்கத்தில் இருக்கும் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள் இரு வேலை நாட்களுக்குள் (உங்களுடையது ஸ்பேம் ப்ளாக் இல்லையென்றால்) நல்ல பதிலை எதிர்பார்க்கலாம்.

சந்தேகமா...? என் வலைப்பூவுக்கு இதை செய்து விட்டேன் ப்ளாக்கரும் ஆராய்ந்து ஸ்பேம் இல்லை எனவும் மன்னிக்க சொல்லியும் மின்னஞ்சல் செய்து விட்டது (பார்க்க: படம்) பாவம்...னு மன்னிச்சுட்டேன்.






Categories: ,,

5 comments:

said...

thank u

said...

தகவலுக்கு நன்றி.

said...

வலைப்பதிவு உலகில் பல முக்கிய விடயங்களை பதிந்துவருகிறீர்கள். நான் உங்களுடைய பதிவுகளை அனைத்தையும் வாசித்திருக்கிறேன். தொடர்ந்து பதியுங்கள்.

அன்புடன்
தமிழ்வாணன்

said...

அன்பு நண்பரே!
எனக்கும் அப்படித்தான் வந்தது. தாங்கள் கூறியபடி என் வலைப்பூவுக்கு இதை செய்து விட்டேன் .
மிக்க நன்றி

said...

Good blog!

Useful one!!