செல்பேசி மூலம் சிக்கன இணையம்

ப்ளாக் பெர்ரி மாதிரியான வேலையை அவ்வளவு பணம் கொடுக்காமலே செய்து முடியும். இந்தியாவில் செல்பேசி நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. படைப்புத்திறன் மிகுந்த இணைய நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வசதி ஒரு நாளைக்கு 20 ரூபாய் என்பதிலிருந்து மாதம் 375 ரூபாய் என நிறைய சிக்கனமான ப்ளான்களில் கிடைக்கிறது. செல்பேசி மூலமாக இணையத்தில் இணைத்துக் கொள்வது பல வழிகளில் பயனளிக்கும்.

1. நீங்கள் பயணத்திலிருக்கும்போது இணையத்தில் உலவ,
2. இணையம் தொடர்பு கொள்ள அருகில் வசதிகள் இல்லாத போதோ,
3. 24 மணி நேரமும் உங்கள் கையோடு இணையம்
4. சிறு சிறு வேலைகள் உதாரணத்திற்கு மின்னஞ்சல் பார்க்க, ப்ளாக் கமென்ட் பார்க்க, chat செய்ய‌
5. முக்கியமாக, உங்கள் வீட்டுக் கணிணியோடு செல்பேசியை modem ஆக இணைத்து எளிதாக குறைந்த விலையில் இணையத்தில் உலவ‌

நான் இப்படி தான் இணைத்துள்ளேன். பெரிய கோப்புகளை பதிவேற்ற முடியாது, மற்றபடி டாகுமென்ட் பதிவேற்றலாம். பதிவிறக்க தாமதமாகும், இது போல சில விஷயங்களுக்காக‌ சில மென்பொருட்களை உபயோகிக்க வேண்டும் (இப்பதிவிற்கு உள்ள வரவேற்பை பொறுத்து அவற்றையும் செல்பேசி மென்பொருட்களையும் பற்றிய விவரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன்).

எப்படி இணைப்பது

முதல் முறை செட் அப் செய்வது மட்டுமே கொஞ்சம் கோக்குமாக்கான வேலை. அதன் பிறகு பிரச்னையே கிடையாது.

தேவையானவை:

1. ஜாவா உள்ள ஒரு செல்பேசி (உங்கள் செல்பேசியில் பிரவுசர் இருக்கிறதா, அதை கணிணியோடு இணைக்க முடியுமா, USB கேபிள், PC Suite என்று ஏதாவது தந்திருக்கிறார்களா)
2.இணைய வசதி தருகிற ஒரு கனெக்ஷன் (Aircel ல் இணைய வசதி தரப்படுவதில்லை.)
3.கணிணியோடு இணையம் இணைக்க விரும்பினால் ஒரு கணிணி :)

(மற்ற மாநிலங்களில் ப்ளான்கள் பற்றி தெரியாது. சில நாள் காத்திருந்தால் சொல்வேன் ஏனென்றால் நான் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து பெங்களூரு செல்ல வாய்ப்புகள் உண்டு) முதலில் ஒரு நாளைக்கு மட்டும் இணைய வசதி தரக்கூடிய ப்ளான்கள் உண்டு Airtel, Vodafone இவற்றில் 20 ரூபாய் இருக்கும் internet e-charge என்று கேளுங்கள்.

உடனே உங்கள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். இந்த மாதிரி ஒருநாள் இணைய ப்ளான் போட்டதாக சொன்னால் அவர்கள் Mobile Office என்கிற ஒரு கோப்பினை உங்கள் செல்பேசிக்கு அனுப்புவார்கள். அதை இன்ஸ்டால் செய்யுங்கள். அப்புறம் Google போய் "உங்கள் செல்பேசி மாடல் எண்" wap என்று இட்டு தேடுங்கள்.

உதாரணத்திற்கு என்னுடைய செல்பேசி மாடல் Sony Ericsson Z530i, இதற்கு Google l போய் "530i wap" என்று இட்டால் சோனி எரிக்சன் நிறுவன தளம் ஒன்றும் காட்டப்படும். அதை க்ளிக்க அதில் என்னுடைய செல்பேசி எண், பெயர் இன்ன பிற விவரங்களை இட அத்தள சார்பில் என் செல்பேசிக்கு ஒரு கோப்பு அனுப்புவார்கள், அதை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை செல்பேசியை restart செய்ய வேண்டும்.

இப்போது browser ஒன்று செல்பேசியில் இருக்கிறதா, அதில் ஏதாவது URL அளித்து சோதிக்க வேண்டும். கனக்ட் ஆகவில்லையென்றால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை அழையுங்கள், அவரே பிரச்னையை சரி செய்து தருவார்.

கனெக்ட் ஆனதும் உங்கள் செல்பேசியை கணிணியோடு இணையுங்கள், USB Cable மூலம். உங்கள் PC Suite ஐ install செய்யுங்கள். அதில் Connect to internet அல்லது mobile connecting wizard என்கிற மாதிரி ஏதாவது இருக்கும். அதை அழுத்த சின்ன சின்ன விவரங்களை தர (தெரியாதவற்றை எதுவும் தராமல் விட்டு விடுங்கள்) இணையம் கணிணியோடு இணைக்கப்படும்.

3 comments:

said...

மிக நல்ல யோசனை. ஆனால் என்னிடம் ரிலையன்ஸ் CDMA போன் தான் உள்ளது.

பதிவில் chat உருவாக்குவது எப்படி தயவு செய்து தெரிவுயுங்கள்

said...

ரிலையன்ஸ் பற்றி தெரியவில்லை சுந்தர், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை அணுகிப் பாருங்களேன். பதிவில் chat உருவாக்க http://www.google.com/talk/whatsnew.html இத்தளத்தில் உள்ள கோடிங்கை உங்கள் தளத்தில் இட்டுக் கொண்டால் போதுமானது. நன்றி!

said...

மேசை கணினி மற்றும் மடி கணினி இரண்டிலும் இந்த முறையில் இணையத்தில் இணைய முடியமா? விளக்கம் தேவை.

நட்புடன்
இஸ்மாயில் கனி