இது ஒரு சுய நலப்பதிவு ;) உங்கள் ஆதரவுக்காக எழுதப்பட்டுள்ளது.
நேற்று என் மின்னஞ்சல் Hack செய்யப்பட்டது, இது குறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறேன்.அதனால் Hack செய்யப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்க இயலவில்லை.நீங்கள் யாராவது இதற்கு முன் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா சைபர் க்ரைமில் புகார் தருவதால் பலன் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என்று தயவு செய்து கமெண்ட்டில் தெரிவிக்கவும்.அப்புகாரில் என் தளத்தில் இதைப் பற்றி எழுதுவதாக தெரிவித்திருக்கிறேன் ஆதலால் ஆதரவு தெரிவிப்போர் தயவு செய்து கமெண்ட்டில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Categories: updates
மதியம் வெள்ளி, ஜூன் 30, 2006
என் மின்னஞ்சல் Hacked
மதியம் ஞாயிறு, ஜூன் 25, 2006
BashaIndia விருது முடிவுகள் அறிவிப்பு
சில நாட்களுக்கு முன் பாஷா இந்தியா இணைய தளம் வருடாந்திர சிறந்த பதிவருக்கான விருதுக்கு அனுப்பச்சொல்லி கேட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.அதில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ் மணத்திற்கு 'டெக்னாலஜி' யின் கீழ் விருது தரப்பட்டுள்ளது. பரிசீலனைக்கு அனுப்பியவர்கள் பார்க்கவும்.
(எனக்கு 50 Early Bird Members ல் பெயர் போட்டிருக்கிறார்கள், என்ன அர்த்தம்?)
Categories: updates
மதியம் வெள்ளி, ஜூன் 23, 2006
கோப்பு உடைக்க (ம்ம்ம்... File Splitter)
பெரிய அளவிலான கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்ப முடியாமல் கஷ்டப்படுபவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.நீங்கள் செய்ய வேண்டியது இந்த செயலியை பதிவிறக்கம் செய்வது தான்.இது தரப்படும் கோப்பை எத்தனை பாகமாகவும் பிரிக்கும்,அதே போல பிரிக்கப்பட்ட கோப்புகளையும் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
Categories: software
மதியம் வியாழன், ஜூன் 15, 2006
ஆன்லைன் HTML பிரிவியூ
குறிப்பு: மேலே சொன்ன எல்லாவற்றுக்கும் தமிழில் மொழிமாற்றித் தரவும்.
நீங்கள் ஒரு வலைநுட்பராக (web designer?) இருந்தால் இத்தளம் உங்களுக்கு மிகவும் உதவும்.வலைப்பதிவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் HTML ஐ கையாள்வதால் இங்கே சொல்கிறேன்.அது மட்டுமின்றி ப்ளாக்கரில் நீங்கள் ஒவ்வொரு முறை பிரிவியூ பார்க்கும்போதும் அது உங்கள் விளம்பரதாரர்களால் இம்ப்ரெஷனாக கவனிக்கப்படுகிறது ஆகவே இது மாதிரியான ஒரு தளம் இருப்பது உங்கள் வேலையை எளிதாக்கலாம்.
முதல் விஷயம் இது Firefoxல் மட்டுமே வேலை செய்யும்.இத்தளத்திற்குள் போனதும் கொஞ்சம் விளையாண்டு பார்த்தால் புரியும் அல்லது வலது பக்கத்து ஸ்கிரிப்டை அழித்தால் இடது பக்க ரிசல்ட் பக்கம் மாறும்.அதாவது கோடிங் வலது பக்கமும், ரிசல்ட் இடது பக்கமும் உள்ளது.ஏதாவது ஒரு ஸ்கிரிப்டை இப்போதைக்கு என் தளத்தில் ரைட் க்ளிக் செய்து வியூ சோர்ஸ் செய்து அதை அங்கே போடுங்கள், தானே ஸ்டைல் ஷீட் ஸ்கிரிப்ட் அதற்கான டேப்புக்குள் போய் விடுவதை கவனிக்கலாம்.
ஏகப்பட்ட ஆங்கில வார்த்தைகள் ஸாரி ச்சே மன்னிக்கவும்.
Categories: onlinetools
மதியம் புதன், ஜூன் 14, 2006
எந்த அளவிலும் கோப்புகளை அனுப்ப
எந்த அளவிலும் இருக்கும் கோப்பு(file)களை அனுப்ப இந்த செயலி உதவுகிறது.இதை அனுப்புனரும்(sender), பெறுநரும்(receipient) பதிவிறக்கம் செய்து கொண்டால் போதுமானது.மின்னஞ்சல் மூலம் இது செயல்படுகிறது,எல்லா கோப்புகளும் .pando என்று மாற்றப்படும்,பிரிவியூ முறையில் அனுப்பப்பட்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்யுமுன்பேயும் பார்த்துக் கொள்ளலாம்.இப்போதைக்கு betaவில் இருப்பதால் 1 GB வரை மட்டுமே அனுப்ப இயலும்,விரைவில் கட்டுப்பாடற்ற வகையில் எந்த அளவுள்ள கோப்புகளையும் அனுப்ப வகை செய்யப்படும் என்கிறார்கள்.
Categories: onlinetools
மதியம் செவ்வாய், ஜூன் 13, 2006
Affiliate முறையில் விருப்பமுள்ளோருக்கு
ஆன்லைனில் உங்கள் தளத்தை பார்ப்போர் பொருட்களை ஆன்லைனில் வாங்குபவர்கள் என நீங்கள் கருதினால் இத்தளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
Amazon மாதிரியான தளங்கள் கொண்டு விற்கும் முறையை எளிதாக்குகிறார்கள்.
இது முதல் தளம் நீங்கள் விரும்பும் பொருட்களை பதிந்து கொண்டு பிறகு உங்கள் வலைப்பூ,இன்ன பிறவற்றில் Broadcast செய்யலாம்.
அடுத்தது இத்தளம் இது இன்னும் எளிதானது, ஒவ்வொரு பதிவிலும் உங்கள் விருப்பமான அல்லது விற்க விரும்பும் பொருளை keyword ஆக எழுதினால் போதும் அப்பொருள் சம்பந்தப்பட்டவை விளம்பர பகுதியில் தெரியும்,amazonல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
Categories: adsense
மதியம் ஞாயிறு, ஜூன் 11, 2006
30 Boxes சில மாற்றங்கள்
30 Boxes எனும் ஆன்லைன் ஒழுங்குபடுத்தி (organizer) தளத்தைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்.இத்தளம் இப்போது இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.மேல் இடது பக்கத்தில் webtop என்றிருப்பதை கவனிக்கவும்.அதை க்ளிக் செய்தீர்களானால் Mac மாதிரியான ஒரு பக்கம் கிடைக்கும்,அதில் நாட்குறிப்பு,இன்றைக்கு செய்ய வேண்டியவை,Google தேடுதல்,Yahoo மின்னஞ்சல் ஆகியவற்றுக்கான லிங்க்கள் இருக்கும்.Settings சென்று உங்களுக்கு பிடித்த தளங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்,எத்தனை வேண்டுமானாலும்.
குறிப்பு: 30 Boxes தமிழ் யுனிகோட் சப்போர்ட் செய்கிறது.உங்கள் தினசரி தேவைகளை தமிழிலேயே எழுதலாம்,இது உங்களை நிச்சயம் ஊக்குவிக்கும் என நம்புகிறேன், தள்ளிப்போடுவதை தவிர்க்க.
Categories: life-easy
மதியம் வெள்ளி, ஜூன் 09, 2006
ஆன்லைனில் சுடோகு விளையாட
மதியம் வியாழன், ஜூன் 08, 2006
மரண தேதி அறிய விருப்பமா?
உங்கள் மரண தேதி சொல்ல இங்கே ஒரு தளம் இருக்கிறது.சில பல கேள்விகளைக் கொண்டு உங்கள் மரணம் எந்த வயதில் நிகழலாம் என கூறுகிறார்கள்.ஆனால் தேமே என்று அதை மட்டுமே சொல்கிறார்கள், மருத்துவர்கள் வைத்து செய்யப்பட்டதாக சொல்கிறார்கள் எப்படி இதை முடிவு செய்கிறார்கள் என்றும் சொன்னால் பார்ப்போர் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும் இல்லையா?
Categories: life-easy
மதியம் புதன், ஜூன் 07, 2006
உயிர் காக்க இணையம்
இணையம் பொழுதுபோக்குக்காக இருந்த நிலை மாறி அத்தியாவசியம் என்கிற நிலைக்கு (வளர்ந்த நாடுகளில் வந்து விட்ட மாதிரி) வளரும் நாடுகளிலும் முன்னேறி விட்டது.பாரத் திருமண தகவல் மையத்தின் பொதுச்சேவையாக இரத்த தான இணைய வங்கி உருவாக்கப்பட்டிருக்கிறது.இதில் அவசரத்திற்கு என தேட வசதியாக உங்கள் ஊரில் உங்கள் கிராமத்தில் யாரேனும் டோனர் இருந்தால் அவர் முகவரி தரப்படுகிறது.உறுப்பினராகும்போதும் எல்லா ஊர்களின் கிராமங்கள் கூட வகைப்படுத்தப் படுகின்றன.மற்றும் நண்பர்களுக்கு சொல்லும் வசதி,டிப்ஸ் ஆகிய இன்னபிற செய்திகளும் உண்டு.
Categories: life-easy,newsupdate
மதியம் செவ்வாய், ஜூன் 06, 2006
தகவல்கள் பத்திரம்
உங்கள் தகவல்களை பத்திரமாக வைத்துக் கொள்ள நிறைய செயலிகள் உண்டு.இலவசமாக மிகவும் பாதுகாப்பானதாக வைக்க விரும்பினால் இச்செயலியை எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் இதில் text fileகளை மட்டுமே பாதுகாக்க முடியும்.உங்கள் password,serial number போன்ற தவல்கள் அடங்கிய கோப்புகளை இங்கு பாதுகாக்கலாம்.இதே நிறுவனத்தின் மற்ற செயலிகளை விற்க ஒரு விளம்பரமாக இதை இலவசமாக தரும் பழைய வியாபார உத்தி தான்,அதனாலென்ன?
Categories: software,download
மதியம் ஞாயிறு, ஜூன் 04, 2006
ஆன்லைன் நட்பு வித்தியாசமாக
ஆன்லைனில் இதுவரை நண்பர்களை தேர்வு செய்யும் விதம் வழக்கமானது ஆனால் இத்தளம் கொஞ்சம் வித்தியாசமாக செயல்படுகிறது.அதாவது நீங்கள் உறுப்பினராதும் ரேண்டமாக இன்னொரு உறுப்பினரின் ப்ரொபைல் தரப்படும் நீங்கள் பேசிக்கொள்ளலாம் நான்கு நாட்களுக்குள் அவருடன் நட்பு வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என முடிவு செய்து கொண்டதும் அடுத்த ரேண்டம் நபரின் ப்ரொபைல் தரப்படும்.அவ்வளவே விஷயம் ஆன்லைன் நட்பு தளம் என்றாலே அப்டி இப்டி தான் ட்ரை பண்றது இதெல்லாம் சரிப்படுமா?
Categories: life-easy
மதியம் சனி, ஜூன் 03, 2006
கூகிளின் free mail id for your domain
இன்னும் பீட்டாவுக்கு கூட வரவில்லை,கூகிள் உங்கள் டொமைன் பெயருக்கு மின்னஞ்சல் சேவை வழங்கும் திட்டம்.அதாவது gokul@iniyathalam.com மாதிரி ஆனால் .blogspot வந்தால் தருவார்களா என்று தெரியவில்லை.காரணம் இதில் பங்கு பெற உங்களுக்கு சொந்தமாக ஒரு யுஆர்எல் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.அப்படி என்றாலும் கவலை வேண்டாம் ஒரு url வெறும் 350 தான் அதுவும் வருடத்திற்கு.
ஆனால் ஒரு வெப் டிசைனராக இதை பெரிதும் வரவேற்கிறேன் காரணம் இதுவரை க்ளையண்ட்களுக்கு 5-10 மின்னஞ்சல்கள் தான் தரமுடிந்தது இனி எத்தனை வேண்டுமானால் தரலாம் அதுவும் இலவசமாக மட்டுமில்லாமல் தளத்தின் ஸ்பேஸை மெயில் அக்கவுண்ட்டொடு பகிரத்தேவை இருக்காது என்றால் கசக்குமா என்ன?
பதிவு செய்து கொள்ளுங்கள் இப்போதே.
Categories: google,webhost
மதியம் வெள்ளி, ஜூன் 02, 2006
வீடியோ தேடு தளம்
புகழ்பெற்ற வீடியோ தளங்களில் தேட வசதியாக இத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.இங்கு Google,yahoo,ifilm மற்றும் youtube ஆகியவற்றிலிருந்து தேட முடியும்.உறுப்பினராகும் வசதியும் உண்டு.மற்ற இசை போன்ற தேடுதல் வசதிகளும் உண்டு
அப்டேட்: யாஹீ திரும்பவும் வீடியோ சேவையைத் தொடங்கி இருக்கிறது எனக்கு பிடித்து விட்டது காரணம் கூகிள்,யூட்யூப் இரண்டுமே என் வீடியோவை எப்படி (கேலி) செய்திருக்கின்றன பாருங்கள்:
யூட்யூப் வீடியோ
யாஹீ அல்லது இங்கே க்ளிக்குங்கள்
மதியம் புதன், மே 31, 2006
ஆன்லைன் கேம்ஸ்
மதியம் செவ்வாய், மே 30, 2006
ஆன்லைனில் zip செய்ய
திடீரென உங்கள் winzip வேலை செய்யாமல் போனாலோ அல்லது பிரவுசிங் செண்டரில் இல்லாமல் போனாலோ ஆன்லைனிலேயே அதை செய்யும் வசதி இங்கிருக்கிறது.இத்தளத்தில் நான்கு வசதிகள் உண்டு.
ஒன்று உங்கள் சிஸ்டத்தில் இருந்து அப்லோட் செய்யலாம்.
அடுத்து zip பைலை அப்லோட் செய்து unzip செய்யலாம்
மற்றும் இணையத்திலிருந்து கிடைக்கும் பைலை அதன் url தந்து zip மற்றும் unzip செய்யலாம்
அவற்றை மெயிலில் அனுப்பலாம்,இதற்கெல்லாம் பதிவு செய்யத் தேவையில்லை செய்து கொள்ளும் வசதியும் உண்டு.அதிகபட்சம் 10 பைல்களை ஸிப் செய்யலாம்.பதிவு செய்து கொண்டால் இரு மெயில் ஐடிகளுக்கு அனுப்பலாம்.
24 மணி நேரம் தான் சர்வரில் வைத்திருப்பார்கள் அதற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு மைனஸ்.
Categories: onlinetools
மதியம் வியாழன், மே 25, 2006
AJAX தள முகவரி தேடும் தளம்
இத்தளத்தில் உங்களுக்கு வேண்டிய டொமைன் நேமை டைப் அடித்து அது இருக்கிறதா என அறிந்து கொள்ளலாம் ஒரு வேளை இல்லையென்றால் அதை தற்சமயம் வைத்திருப்போரின் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்
Categories: onlinetools
மதியம் புதன், மே 24, 2006
பிறந்த நாள் தகவல்கள்
மதியம் செவ்வாய், மே 23, 2006
கமெண்ட் எடிட் செய்ய
ரொம்ப நாள் முன்பு ஒரு நண்பர் கமெண்ட்களை எடிட் செய்ய முடியுமா என்று கேட்டார் இப்போது தான் ஒரு தளத்தில் இதற்கான ஸ்கிரிப்ட் பார்த்தேன் நீங்கள் கமெண்ட்டை மாற்ற முடியும்.
ஆனால் இதனால் என்ன பயன்? மற்றவர் கமெண்ட்டை மாற்றுவது அநாகரிகம் இல்லையா? வேண்டுமானால் பிழை திருத்த உபயோகப்படுத்தலாம்
உங்கள் பதிவில் கமெண்ட் பக்கத்தில் (நீங்கள் ஓனராக இருப்பின்) தெரியும் delete இமேஜை ரைட் க்ளிக் செய்யவும் copy shortcut தந்து அதை இங்கே பேஸ்ட் செய்யவும் அடுத்து க்ளிக் செய்தால் வரும் பக்கத்தில் எடிட் செய்து பப்ளிஷ் செய்யவும்
Categories: hack
மதியம் திங்கள், மே 22, 2006
உறவுகள் மேம்பட ஒரு தளம்
மதியம் ஞாயிறு, மே 21, 2006
ரயில்வே தளத்தில் அதிர்ச்சி
ஆன்லைன் ரிசர்வேஷன் செய்ய நம் ரயில்வே தளத்தை பார்த்த போது அங்கிருந்த விளம்பரங்களை பார்க்க நேரிட்டது.பெரும்பாலும் கார்ப்பரேட் தளங்களில் விளம்பரங்களை இதற்காகத் தான் அனுமதிப்பதில்லை ஒன்று இவர்கள் கூகிளின் filter வசதியை உபயோகப்படுத்தி இருக்க வேண்டும் அல்லது விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது.
நமக்கொன்றும் நஷ்டமில்லை லல்லுவுக்கு தான்.
Categories: funny
மதியம் சனி, மே 20, 2006
க்ளிக்காதீர்கள்....!
மதியம் வியாழன், மே 18, 2006
உங்கள் தளத்தில் அர்த்தமுள்ள Ads
கண்ட கண்ட சம்பந்தமேயில்லாத Ads உங்கள் தளத்தில் வருகிறது உங்களுக்கு பிடித்தமான அல்லது நீங்கள் செலெக்ட் பண்ணுகிற Ads வரவேண்டுமென நினைப்பவர்களுக்கான தளம் இது.இங்கே பதிவு செய்வதும் எளிது தள ரிவியூ ஏதுமில்லை, அப்படியே எடுத்து போடவும் கீ வேர்டு அல்லது Adகளை பார்த்து xml பட்டனை க்ளிக் செய்யவும், அவ்வளவே!
Categories: adsense
மதியம் புதன், மே 17, 2006
பிங் (Ping ) பண்ணுங்கோ
அதாவது தமிழ் தளங்களுக்கு இத்தகைய சர்வீஸ் இதுவரை உபயோகப்படாததுக்கு ‘கல்லைக்கண்டா நாயக்காணோம்’ மாதிரியான அணுகுமுறையும் ஒரு காரணம்.நம் தளத்தை தமிழ் டைரக்டரிகளில் அப்டேட் செய்வது போல ஆங்கிலம் அதிகம் உபயோகப்படும் மற்ற டைரக்டரிகளுக்கு மொத்தமாக அப்டேட் பண்ணுவதற்கென்றே சில தளங்கள் இயங்குகின்றன.ஆனால் தமிழ் வலைப்பூக்களை இங்கே காண முடிவதில்லை…காரணம் யாரும் பண்ணுவதில்லை நான் மேலே சொன்ன நிலை. இனி பிங் இங்கேயும் பண்ணுங்கள்.இது முதல் சர்வீஸ் (இத்தளம் தற்சமயம் down ஆக இருக்கிறது என நினைக்கிறேன்) இங்கே முதல் தடவை பிங் பண்ணி விட்டு அடுத்து ரிசல்ட் தளத்தில் வரும் லிங்க்கை புக்மார்க் பண்ணிக்கொண்டால் போதும் ஒரே க்ளிக்கில் அடுத்தெல்லாம் பிங் பண்ணிக்கொள்ளலாம்
இதே சேவையை வழங்கும் மற்ற தளங்கள்
pingoat
feedping
Categories: blogtools
மதியம் செவ்வாய், மே 16, 2006
உங்கள் ஈகோவை அறிய
இணையத்தில் உங்களது இடத்தை அறிய இத்தளம் உதவுகிறது.இங்கு சென்று உங்கள் பெயர் , வலைப்பூ முகவரி அளித்தால் உடனே அது கூகிளில் தேடும் (இன்ன பிற தேடு தளங்களிலும்).உங்கள் பெயர் மற்றும் வலைமுகவரி இரண்டையும் இணைக்கும் தளங்களை கண்டு பிறகு தனது அல்காரித உதவியோடு உங்கள் ஈகோ அளவை மதிப்பிட்டு சொல்லும். ஸீரோ வாங்கினால் கவலை வேண்டாம், மற்ற டெக்னோராட்டி, டெலிஷியஸ் மாதிரியான சர்வீஸ்களையும் துணைக்கு கூப்பிடலாம். இந்த ரிசல்ட்டை உங்கள் தளத்திலும் காண்பிக்கலாம்.
ஓரளவு விசிட்டர்ஸ் சேர்ந்தவுடனே வலைப்பதிவர்கள் செட்டிலாக கூடாது, தனது நிலை இணையத்தில் எங்கே இருக்கிறது என அறிந்து கொண்டு இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் அதற்காகவே எங்கள் தளம் என்கிறார்கள் நிர்வாகிகள். எனக்கு கடைசி வரை ஸீரோ காட்டி டீஸ் பண்ணிட்டு கடைசில பாவம்னு 234 (தொகுதியாட்டமா) காட்டுச்சு
Categories: blogbetter
மதியம் திங்கள், மே 15, 2006
3D மெஸெஞ்சர்
எல்லாமே இங்கே 3D , உங்கள் அவதார் செலெக்ட் செய்து கொண்டு ஏற்கனவே உள்ள சீன்களை செலெக்ட் செய்து பேச ஆரம்பிக்கலாம் மற்ற ஆப்ஷனெல்லாம் எல்லா மெஸெஞ்சரிலும் இருப்பது தான்.ஆனால் ஆணும் பெண்ணும் பேசுவதை தான் எல்லா ஸ்கிரீன் ஷாட்டிலும் காட்டியிருக்கிறார்கள் ஏனோ?.
Categories: onlinetools
மதியம் ஞாயிறு, மே 14, 2006
மெயில் கதைகள் உண்மையா?
உங்களுக்கு மெயிலில் வரும் தகவல்கள் பெரும்பாலும் ஆச்சர்யப்பட வைக்கும் விதத்தில் இருக்கும்.அக்கதைகள் உண்மையா என நாம் ஆராய்வதில்லை, ஆனால் எப்போதாவது அவற்றை மற்றவர்களுக்கு அதை சொல்லும்போது நம் மூக்கு உடை படக்கூடாது அல்லது குழந்தைகளுக்கு இவைகளை தவறாக சொல்லக்கூடாது என நினைப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம்.இங்கே இப்படி வதந்தி பரப்பப்படும் அனனத்து கதைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன அதோடு அவை பொய்யென்பதை ஆதாரத்துடன் விளக்கவும் செய்கிறார்கள்.
ஐன்ஸ்டீன் பற்றி வந்த ஒரு கதை உண்மை என நான் இத்தளத்தை பார்க்கும் வரை நம்பியிருந்தேன் (அவன் மட்டும் கையில கிடைச்சான்...!).
Categories: life-easy
மதியம் சனி, மே 13, 2006
சிறப்பான டிக்ஷனரி
ஆன்லைன் அகராதிகள் உபயோகப்படுத்துவோருக்கு இன்னும் கொஞ்சம் சிறப்பான தளமாக அறிமுகமாகியிருக்கிறது இது.இதன் முக்கிய சிறப்பம்சம் AJAX நுட்ப ஸ்டைலில் (அதேவா என்று பார்க்கவில்லை) உருவாக்கப்பட்டிருப்பது தான்.அதாவது உங்களுக்கு வேண்டியதை டைப் செய்தால் போதும் அடுத்த பேஜ்க்காக காத்திருக்க தேவையில்லை.இதன் அடுத்த பக்கமாக அப்ரிவியேஷன் காண ஒரு தளம் தந்திருக்கிறார்கள், நல்ல ஐடியா இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
Categories: onlinetools
மதியம் வியாழன், மே 11, 2006
Y! Tech ஒரு அறிமுகம்
யாஹீவின் சமீபத்திய புது வரவு யாஹீ டெக்.இது கூகிளுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டிருக்கிறது மற்றும் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது எனலாம்.நேவிகேஷன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இதில் நமக்கு மிகவும் பயனுள்ள பகுதி கேள்வி-பதில்.உங்கள் விண்டோஸ்,ஐபாட்,வாக்மேன் இன்னும் என்னென்ன இருந்தாலும் அவை பற்றிய கேள்விகளை இங்கு காணலாம்.ஒரு உதாரணம் இது.
அடுத்தது எக்ஸ்பெர்ட் அட்வைஸ் பகுதி இங்கும் நிறைய தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ளலாம், அதற்கு ஒரு உதாரணம் இங்கே.
Categories: life-easy
மதியம் செவ்வாய், மே 09, 2006
இலவச ப்ராஜெக்ட் ட்ராக்கர்
இம்மாதிரி தளங்களும் இணையத்தில் அதிகமே அவற்றுள் இது புது வரவு.மற்றும் நான் அதிகமாக உபயோகப்படுத்தும் தளங்களின் வரிசையிலும் இது உண்டு.அதாவது டீம் லீடரோ அல்லது என்னைப் போல் (விளம்பரம்?) ப்ரீலேன்சரோ நீங்கள் என்றால் உங்களுக்கு மிக உபயோகமானது.இங்கு க்ளையண்ட்,எம்ப்ளாயீ,டாஸ்க்,ரிமைண்டர் என நிறைய ஆப்ஷன்கள் உண்டு.உங்களுக்கு கீழ் வரும் எம்ப்ளாயீக்களுக்கு தனியாக உள் நுழைய அக்கவுண்ட் அவர்கள் மெயிலுக்கு அனுப்பப்படும்.இதன் மூலம் ப்ராஜக்ட்டுக்கு இண்டராக்டிவிடி கிடைக்கும்.இன்னும் நிறைய வசதிகள் உண்டு.
Categories: online-tools,life-easy
மதியம் திங்கள், மே 08, 2006
Adsense பயன்படுத்துவது சட்ட விரோதம்
இதை எழுதவா வேண்டாமா என்றே யோசித்தேன், ஆனாலும் வேறு வழியில்லை.தமிழ் வலைப்பூக்களில் நீங்கள் Adsense பயன்படுத்துபவரானால் அதை இப்போதோ பொறுமையாகவோ எடுத்து விடவும்.காரணம் Adsense policy தெளிவாக சொல்வது இங்கே,
"
Language
The AdSense ad code for contextually-targeted ads may be placed on pages with content primarily in any of our supported languages. Ads must not be displayed on any page with content primarily in an unsupported language.
"
அதாவது மற்ற மொழிகளை முதன்மையானதாக கொண்ட தளங்களில் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.நான் பொறுமையாக ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இதற்கு மாற்று வழிகளும் உண்டு.
1.மற்ற இதே போன்ற புரோக்ராம்களில் இணைந்து கொள்ளுங்கள், உதாரணம் Adbrite.வேறு வகையான புரோக்ராம்களை விரைவில் எழுதுகிறேன்.
2.Adsense கண்டிப்பாக வேண்டுமென்றால் ஒரு ஆங்கில வலைப்பூ ஆரம்பியுங்கள்.
கூகிள் அனுமதிக்கும் வரை நாம் இப்படி செய்வது சட்ட விரோதமே.அறியாமையும் சட்டப்படி குற்றமே என்பதால் இங்கே இவற்றை எழுதினேன்.முழு விவரங்களுக்கு...
Categories: newsupdate
மதியம் சனி, மே 06, 2006
கூகிள் புதிய ரெஃபரல் திட்டங்கள்
கூகிளில் புதிதாக இரு பரிந்துரை (Referral) திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கூகிள் பேக் மற்றும் பிக்காஸா என்பவை அவை.இவற்றில் கூகிள் பேக் என்பது பல கூகிள் செயலிகளின் தொகுப்பு, இதை உங்கள் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தால் உங்களுக்கு 2$ கிடைக்கும்.ஆனால் ஏனோ இது நான் தேடியபோது என் அக்கவுண்ட்டில் தெரியவில்லை. ஒருவேளை அமெரிக்க வாசிகளுக்கு மட்டுமோ என்னவோ...
அடுத்து பிக்காஸா எனும் புகைப்பட செயலி இது வலைப்பூக்களில் எளிதாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய உதவுகிறது, இதுவரை இதை பயன்படுத்தாத விண்டோ பயனர் பதிவிறக்கினால் 1$ தருவார்கள்.
Adwords பழைய ப்ளான் பரிந்துரைக்கு Adsense போலவே விலை மதிப்பீடு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது, பார்த்துக் கொள்ளவும்.
Categories: newsupdate
மதியம் வெள்ளி, மே 05, 2006
சிறந்த செல்பேசி சேவை காண
இந்தியாவில் மட்டுமே இப்போதைக்கு செயல்படும் என நான் பார்க்கிற முதல் தளம். பெரும்பாலும் அமெரிக்காவை மட்டுமே குறி வைத்து இப்படி சொல்லப்படும். விரைவில் இந்தியாவில் இப்படி நிகழலாம் என்று "அமெரிக்க அப்பார்ட்மெண்ட்" பதிவில் சொன்னேனே நினைவிருக்கிறதா?
இங்கே நீங்கள் உங்கள் உபயோக விவரம், பில் ஆகியவற்றை தந்தால் உங்களுக்கு இன்னமும் சிறந்த சேவை குறைந்த விலையில் தரும் மற்ற (போட்டியாளர்கள் உட்பட) ப்ளான்களை கூறுவார்கள்.இப்போதைக்கு கர்நாடகா, டில்லியில் மட்டுமே விரைவில் இந்திய மற்றும் உலக அளவில் விரிவு படுத்தப்படும்.
Categories: onlinetools
மதியம் வியாழன், மே 04, 2006
பிடிக்காத தளத்தில் முட்டை,தக்காளி
இது தேர்தல் நேரம், மேடையில் பிடிக்காத தலைவர்கள் மேல் அழுகிய முட்டை, தக்காளி, ஆசிட் என அடிப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.அதே போல நீங்களும் உங்களுக்கு பிடிக்காத தளங்களின் மேல் முட்டை அடித்து சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.
இத்தளத்தில் தள முகவரி,ஆசிட்டா,தக்காளியா (?!) (இன்னும் பல ஆப்ஷன்ஸ் உண்டு) என செலெக்ட் செய்து அடுத்தடுத்து அடிக்க ஆடியோ அல்லது மவுஸ் மூலம் என எண்ட்டர் தட்டினால் அந்த தளம் வந்து விழும்.அப்புறமென்ன ஒவ்வொரு முறை மவுஸை க்ளிக் பண்ணும்போதும் சத் சத்தென்று தக்காளி தெறிக்கும், பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.
Categories: funny
மதியம் புதன், மே 03, 2006
ஆன்லைனில் பேச ஒரு நெ.1 செயலி
இதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், எனினும் நான் உபயோகிக்கும் ஒரு வசதியை இங்கு பகிர்ந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது என்பதற்காக பகிர்கிறேன்.
பெரும்பாலும் நெட்கடலைக்கோ, வெளி நாடு வாழ் சொந்தம்,உறவினர்களுடன் பேசவோ யாஹீ மெஸெஞ்சர் உபயோகிப்போருக்கு அடிக்கடி கட்டாவது,ஒருவர் பேசும்போது இன்னொருவர் பேச முடியாமல் போவது, நாய்ஸ் மாதிரியான தொல்லைகள் இருக்கும்.
இப்படி நெட்டில் பேசுவதற்காகவே உள்ள ஒரு செயலி இது உலகம் முழுதும் அதிகம் பேர் உபயோகிப்பதும் கூட.தெளிவு தொலைபேசியில் பேசுவது போலவே இருக்கும், இப்போது வீடியோ வசதி இணைக்கப்பட்ட புதிய வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது.பீட்டா வெர்ஷனும் வெளியிடப்பட்டுள்ளது.
அப்டேட்: Conference call வசதியும் உண்டு.
Categories: download,audio
மதியம் செவ்வாய், மே 02, 2006
அமெரிக்காவில் அப்பார்ட்மெண்ட்
அமெரிக்காவில் (மட்டுந்தான் என நினைக்கிறேன்) வீடு தேடுவது இப்போது வெகு சுலபமாகி விட்டது.ஷாப்பிங் தளம் போல இங்கு தேடலுக்கு ஒரு ஊரை குறிப்பிட்டு அதிலிருந்து எவ்வளவு தூரத்திற்குள்,படுக்கை,குளியலறைகள் எத்தனை வேண்டும், விலை ரேஞ்ச், செல்லப்பிராணிகள் அனுமதி உண்டா வரை சாய்ஸ் உண்டு, மற்ற வசதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.அருகில் மேப் ஒன்றும் காட்டப்படும்.நீங்கள் ஓனராக இருந்தால் அப்படியும் பதிவு செய்யலாம்.மற்ற நாட்டவர்கள் ஒரு ஜாலிக்கு போய் பார்க்கலாம், விரைவில் இந்தியாவிலும் இப்படி நடக்கலாம் இணையம் உபயோகிப்போர் விகிதம் முந்நூறு மடங்கு அதிகரித்துள்ளதாமே இந்தியாவில்.
Categories: onlinetools,life-easy
மதியம் திங்கள், மே 01, 2006
பல்வேறு வகையான டிப்ஸ்,ட்ரிக்ஸ்
மிக எளிமையான,பயனுள்ள டிப்ஸ் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.நீங்களும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை கூறலாம்.பெரும்பாலும் அந்தந்த துறையில் இருப்போரால் தரப்படுவதால் எல்லாமே உண்மையிலேயே உபயோகமானதாகத் தான் இருக்கிறது.ஒவ்வொரு டிப்புக்கும் சம்பந்தப்பட்ட தலைப்பு தந்திருக்கிறார்களே தவிர வகைப்படுத்தப்படவில்லை என்பது ஒரு முக்கியமான குறை.மற்றபடி மிகவும் உதவியான தளம்.
Categories: life-easy
மதியம் ஞாயிறு, ஏப்ரல் 30, 2006
20000£ வெல்லுங்கள்
அது மொத்தம் எவ்வளவு என்று கணக்கு போட என்னால் ஆகாது.ஆனால் ஜெயிப்பது மிக எளிது, போட்டு கொடுப்பது, கோள் மூட்டுவது மாதிரியான வேலை தான். BSA என்கிற நிறுவனம் தான் இதை செய்தியாக அறிவித்திருக்கிறது.எங்கே போய் எப்படி விண்ணப்பிப்பது என்பது வரை விளக்கியிருக்கிறார்கள்.நமக்கு ஜெயிப்பது கஷ்டமில்லை இந்தியாவில் பாதிக்கு மேல் பைரஸி தானே விளையாடுகிறது...
Categories: updates
மதியம் வியாழன், ஏப்ரல் 27, 2006
தள்ளிப்போடுவதை தவிர்க்க புத்தகம்
wikiயிலிருந்து தள்ளிப்போடுவதை தடுக்க புத்தகம் தொகுத்திருக்கிறார்கள், ஏற்கனவே நிறையவே அறிவுரைகளை கேட்டிருந்தாலும் இங்கே மொத்தமாக அழகாக தொகுத்திருக்கிறார்கள்.சகல விதத்திலும் ஆராய்ந்து போட்டிருக்கிறார்கள், ப்ரிண்ட் செய்தோ பதிவிறக்கம் செய்தோ பார்க்கவும்... அவ்வளவு பெரிய புத்தகமல்ல, சேமித்துக் கொள்வது பயனளிக்கும் அல்லவா.
Categories: life-easy
மதியம் திங்கள், ஏப்ரல் 24, 2006
கூகிள் 'ஃப்ளேவர்டு' தேடுதல்
உங்கள் தளத்தில் கூகிளின் தேடுதல் வசதி ஏற்படுத்தி இருந்தால் இப்புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். Flavored search என்ற புதிய நுட்பத்தை கூகிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதன் மூலம் உங்கள் தளத்தில் தேடுதலில் கிடைக்கும் (காட்டப்படும்) முடிவுகள் உங்கள் தளத்திற்கு சம்பந்தப்பட்டதாக காட்டப்படும்.உங்களது இசை சம்பந்தப்பட்ட தளம் எனில் தேடுதல் விடைகளில் இசை சம்பந்தப்பட்ட தளங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.இந்த நுட்பம் ஒரே நாளில் செயல்படுத்தப்படாது... உங்கள் தளத்தை பொறுமையாக தானியங்கியாக ஆராய்ந்து செயல்படுத்தப்படும்.
Categories: adsense,blogbetter
மதியம் ஞாயிறு, ஏப்ரல் 23, 2006
உங்கள் இமேஜ்களை மேலும் அழகாக்க
உங்கள் புகைப்படங்களை சேமிக்க நிறைய தளங்கள் உண்டு அவற்றில் இத்தளம் சற்றே வித்தியாசமானது.இங்கே புகைப்படங்களின் வலைப்பூ சொந்தமாக உருவாக்கலாம்.உங்கள் புகைப்படங்களுக்கு ஸ்டிக்கர், பேக்ரவுண்ட், கமெண்ட் வசதி ஆகியவற்றை செய்ய முடியும்.அவ்வப்போதான அப்டேட்களை மின்னஞ்சல் மற்றும் RSS மூலமாக சொல்ல முடியும்.நீங்கள் டிசைனராக இருந்தால் புது டிசைன் கேட்கிறார்கள் ஜெயிப்போருக்கு 1000 டாலர் தருகிறார்கள், கலந்து கொள்ளவும்...வாழ்த்துக்கள்.
Categories: image
மதியம் சனி, ஏப்ரல் 22, 2006
உங்கள் வலைப்பூ அழிக்கப்படுமா
சமீபத்தில் வலை நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ப்ளாக்கர் ரோபோக்கள் நம் வலைப்பதிவை அழித்து விடும் வாய்ப்பிருப்பதாகக் கூறியிருந்தார்.அது உண்மை என்பதும் அவ்வளவு சீரியஸான பிரச்னை என்பதும் அப்போது தான் எனக்கு தெரியும்.அது பற்றி இன்னொரு நண்பர் எழுதிய வலைப்பதிவையும் காட்டி இருந்தார், மிக மிக நன்றி இருவருக்கும்.
வலைப்பதின் போது "word verification" வந்தால் ரோபோக்கள் உங்களை கண்காணிப்பதாகத் தான் அர்த்தம் எனினும் நான் எதிர்பார்த்தது போலவே கண்ணை மூடிக்கொண்டு ப்ளாக்கர் எல்லா வலைப்பூக்களையும் அழிப்பதில்லை. சரி இதை தடுக்க வழி? தேடிய வரை ப்ளாக்கரிடம் சரணடைவது தான், "word verification" என்னும் எழுத்துகளுக்கு அருகிலேயே ஒரு கேள்விக்குறி பட்டன் இருக்கிறதா? அதை க்ளிக் செய்யுங்கள் வரும் பக்கத்தில் இருக்கும் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள் இரு வேலை நாட்களுக்குள் (உங்களுடையது ஸ்பேம் ப்ளாக் இல்லையென்றால்) நல்ல பதிலை எதிர்பார்க்கலாம்.
சந்தேகமா...? என் வலைப்பூவுக்கு இதை செய்து விட்டேன் ப்ளாக்கரும் ஆராய்ந்து ஸ்பேம் இல்லை எனவும் மன்னிக்க சொல்லியும் மின்னஞ்சல் செய்து விட்டது (பார்க்க: படம்) பாவம்...னு மன்னிச்சுட்டேன்.
Categories: life-easy,blogtools,blogbetter
மதியம் புதன், ஏப்ரல் 19, 2006
வீடியோ சேவை தளம்
வீடியோ சேவைக்கான தளங்கள் புதிது புதிதாக முளைக்க ஆரம்பித்து விட்டன, போட்டி அதிகமாகும்போது சலுகைகளும் அதிகமாகும் தானே (தேர்தல் ஜீரம் கண்டுக்காதீங்க) அப்படி கொஞ்சம் நிறைவாக இருக்கும் மற்றொரு தளம் இது.உங்கள் சொந்த வீடியோ தயாரிக்கலாம், பிரைவேட்டாகவோ, பப்ளிக்காகவோ தரலாம், உங்கள் தளங்களில் வெளியிடலாம்.மற்றும் அளவில்லாத பதிவேற்ற இறக்கங்கள் இன்னும் நிறைய உண்டு.எல்லாவற்றையும் விட அவர்களின் காமெடி வீடியோவை பாருங்கள், எப்படியெல்லாம் மார்க்கெட்டிங் செய்கிறார்கள்?
Categories: video
மதியம் செவ்வாய், ஏப்ரல் 18, 2006
ஆன்லைனில் ஸ்பெல் செக்
சட்டென்று இதை செய்ய எம் எஸ் வேர்டு போகாமல் இத்தளத்தை புக் மார்க் செய்து கொள்ளலாம்.(28 மொழிகளில் செய்து கொள்ளலாம் - இவ்வசதி நமக்கு உதவாது).இந்த ஸ்கிரிப்ட்டை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம், இலவசமாக உங்கள் தளத்தில் உபயோகித்துக் கொள்ளலாம்.
இன்னொரு டிப்ஸ் எனக்கு ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு வார்த்தை சந்தேகம் வந்து டிக்ஷனரியிலும் புரியவில்லையென்றால் கூகிள் இமேஜஸில் தேடுவேன் பெரும்பாலும் எளிதில் புரியும்
Categories: onlinetools
மதியம் திங்கள், ஏப்ரல் 17, 2006
முழு தளத்தையும் பதிவிறக்கம் செய்ய
சமீபத்தில் ஒரு நண்பர் அனுப்பிய மெயிலில் ப்ளாக்கர் நம் வலைப்பதிவை மொத்தமாக அழித்து விட வாய்ப்பு உள்ளது என கூறியிருந்தார் அதற்கு மாற்று வழி தேடுகிறேன் எனினும் நம் தளத்தை ஒரு பேக் அப் எடுத்துக்கொள்வதும் நல்லதே உங்கள் தளத்தையோ அல்லது நீங்கள் விரும்பும் மற்ற தளங்களையோ முழுமையாக பதிவிறக்கம் செய்து ஆப்லைனில் காண இந்த மென்பொருள் உதவுகிறது.மற்றும் அவ்வப்போது நீங்கள் புது கன்டென்ட்டை அப்டேட் செய்து கொள்ளவும் முடியும்.
Categories: download
மதியம் சனி, ஏப்ரல் 15, 2006
உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் எப்படிப்பட்டவர் என நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது சரியா என அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ள பர்ஸனாலிட்டி டெஸ்ட்கள் உதவுகின்றன, அப்படி ஒரு தளம் தான் இது. நிறைய பரீட்சைகள் இருக்கின்றன ஒவ்வொன்றும் 10லிருந்து 15 நிமிடம் எடுத்துக்கொள்ளும் சும்மா இருக்கும்போது செய்து பார்க்கலாம்.
Categories: life-easy
மதியம் வெள்ளி, ஏப்ரல் 14, 2006
உங்கள் தளத்தில் இருப்போரை காண
உங்கள் வலைப்பூவில் தற்போது ஆன்லைனில் இருப்போரை காணவும் பேசவும் இத்தளம் உதவுகிறது.என் தளத்தின் கீழே ஸ்க்ரோல் பண்ணவும் ஃபுட்டருக்கே மேலே ஒரு பாக்ஸ் தெரிகிறதா அது தான்.நீங்களும் இத்தளத்தில் பதிந்து கொண்டு என் தளத்தை பார்த்தால் உங்கள் ப்ரொபைலும் தெரியும்.உங்கள் தளத்தில் இருப்போரை மட்டும் காட்டலாம் அல்லது மற்றவர்களின் தளங்களில் இருப்போரையும் காட்டலாம் என ஆப்ஷனும் உண்டு.எதிர்காலத்தில் இன்னமும் நல்ல அப்டேட் வரும் என்கிறார்கள்
Categories: blogtools
மதியம் வியாழன், ஏப்ரல் 13, 2006
உங்கள் புகைப்படங்களை 360ல் காண
அதாவது கார் மாதிரியான பொருட்களின் தளங்களை பார்த்திருந்தீர்களானால் கார் 3டி மாடல் இருக்கும் அதை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம்.கிட்டத்தட்ட அப்படி ஒரு ஐடியா தான் இது
இங்கு நீங்கள் உங்கள் வீட்டை காட்ட விரும்பினால் அதை சுமார் 26 போட்டோ எடுத்துக்கொண்டு பதிவேற்றம் செய்து 3டி போல காட்டலாம், ஷங்கர் படத்தில் செய்வாரே அது போல.அவர்கள் தந்திருக்கும் உதாரண பட லிங்க்களை க்ளிக் செய்து பாருங்கள் உங்களுக்கே ஆர்வம் வரும் இதை வலைப்பூக்களிலும் நீங்கள் வெளியிட முடியும் மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்
Categories: image
மதியம் புதன், ஏப்ரல் 12, 2006
ஆஃப் லைனில் தளங்களை சேமிக்க
நிறைய தகவல் உள்ள தளங்களை பொறுமையாக படிக்க நேரமில்லை மற்றும் இணையத்தை செலவு செய்ய விருப்பமில்லை என்பவர்களுக்காக இத்தளம். இங்கு தரும் செயலியை பதிவிறக்கம் செய்து கொஞ்சம் அலைந்து பார்க்கவும்.உங்கள் சேமித்த தளங்களில் தேடிப் பார்க்கவும் முடியும்.மற்றும் நீங்கள் ஆன்லைன் வரும்போது அந்த தளங்களின் தகவல்கள் அப்டேட் செய்யப்படும், புதிய தகவல்கள் சேர்க்கப்படும் நீங்கள் சொல்லாமலே.
Categories: software,download
மதியம் ஞாயிறு, ஏப்ரல் 09, 2006
கணிணியை ரிமோட் அக்ஸெஸ் செய்ய
உங்கள் கணிணி கோப்புகளை (ஃபைல்) செல்பேசியிலிருந்தோ வேறொரு சிஸ்டத்திலிருந்தோ எடுக்க இத்தளம்
உதவுகிறது.முதலில் இதிலிருந்து ஒரு ஸாஃப்ட்வேரை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் மற்றும் ஆன்லைனில் இருக்க வேண்டும் அவ்வளவே... பாதுகாப்புக்கு குறைவில்லை என்கிறார்கள் மேலும் நீங்கள் எந்த கோப்பையும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை மல்டிபிள் சிஸ்டம் அக்ஸெஸ்ம் உண்டு மற்றும் இது வின்டோஸ் (ஜன்னல்கள் ஹி ஹி) கணிணிகளுக்கு மட்டுமே பொருந்தும்
Categories: download,onlinetools
மதியம் வியாழன், ஏப்ரல் 06, 2006
ஆன்லைனில் புகைப்படம் எடிட் செய்ய
வலைப்பதிவுகளில் இமேஜ் வைப்பது வாசகருக்கு மேலும் படிக்க உற்சாகமூட்டும் விஷயம். நீங்கள் இப்படி ஒரு அருமையான இமேஜை சேர்க்க விரும்பும்போது அது இன்னும் கொஞ்சம் மாற்றப்பட்டிருந்தால் நன்றாக இருக்குமே என விரும்புபவர்கள் மற்றும் இதற்காக போட்டோஷாப் பதிவிறக்கம் செய்ய விரும்பாதவர்கள் இவர்களுக்காகத் தான் இத்தளம் இங்கே அடிப்படை வசதிகள் எல்லாமே உண்டு அதே போல் பெரிய டிசைனர் தான் வேலை செய்ய முடியும் என்றில்லாமல் மிக எளிய நேவிகேஷன் நிச்சயம் உங்களை கவரும்
Categories: image
மதியம் செவ்வாய், ஏப்ரல் 04, 2006
தினசரி முன்னேற்ற செயலி
மதியம் திங்கள், ஏப்ரல் 03, 2006
பிடித்தமான தளங்களை காண வித்தியாசமான மென்பொருள்
இத்தளத்தில் கிடைக்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தமான தளங்களை ஆர்கனைஸ் செய்து கொள்ள நிறைய சாய்ஸ்கள் உண்டு இதனோடே வருகிற பிரவுசரிலோ அல்லது உங்கள் டீஃபால்ட் பிரவுசரிலோ பார்க்கலாம் எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை என நீங்கள் கருதினால் வீடியோ டெமோ அல்லது பதிவிறக்கம் செய்து உபயோகித்து பார்க்கவும்
Categories: download,software
மதியம் ஞாயிறு, ஏப்ரல் 02, 2006
உங்களுக்கென்று ஒரு இலவச டேட்டாபேஸ்
இங்கே ஆன்லைனில் உங்களுக்கென்று ஒரு டேட்டாபேஸ் உருவாக்கிகொள்ளலாம்.பதிவு செய்யத் தேவையில்லை.உங்கள் டேட்டாபேஸ்சை அடைய ஒரு ரகசிய தள முகவரி அளிக்கப்படும். அவ்வளவே.மேப், க்ராப் என பல வழிகளில் பார்க்கலாம்.புக்மார்க்லெட்,ஃபீட் என நிறைய வசதிகளும் உண்டு.
Categories: onlinetools
மதியம் வெள்ளி, மார்ச் 31, 2006
இனி நீங்களும் வாய்ஸ் கொடுக்கலாம்
உங்கள் செய்தியை பேசி ரெகார்ட் செய்து நண்பர்களுக்கு அனுப்ப நிறைய தளங்கள் உண்டு அவற்றில் ஏற்கனவே சிறப்பாக இருப்பது இத்தளம் இதில் நீங்கள் மிக எளிதாக வாய்ஸ் ரெகார்ட் பண்ண முடியும் (மைக்ரோ போன் அவசியம்) அழகான நேவிகேஷன்
அடுத்தது இத்தளம்
இது இச்சந்தையில் புதிதாக நுழைந்திருக்கிறது ஆனாலும் நிறைய புது வசதிகளை தருகிறது இதில் உங்கள் வலைப்பூவிற்கு ஆடியோ செய்தி அனுப்பலாம் , உங்கள் ப்ரோபைலுக்கு ஆடியோ அறிமுகம் தரலாம் மற்றபடி குரூப் பார்ம் பண்ணுவது, தேடல் என வழக்கமான வசதிகளும் உண்டு
Categories: audio,onlinetools
மதியம் வியாழன், மார்ச் 30, 2006
சூப்பர் இமேஜ் சேமிப்பு தளம்
புகைப்பட (டிஜிட்டல் இமேஜ்களை இப்படி சொல்லலாமா?) சேமிப்பு தளங்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக நிறைய தளங்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன. அவற்றில் புதிய ஐடியாக்களால் வித்தியாசப்பட்டு நிற்பது இத்தளம். நான் உபயோகித்த வரை பதிவேற்றம் (அப்லோட்) அருமை எளிதாகவும் வேகமாகவும் நிறைய படங்களை ஏற்ற முடியும். அப்புறம் மிக்கியமானது ஒவ்வொரு நிழற்படத்திற்கும் ஆடியோ கேப்ஷன் அதாவது உங்கள் குரலிலேயே ஒரு சின்ன விளக்கம் தந்து கொள்ளலாம், இன்னொரு வசதி மூன்று மடங்கு டிஜிட்டல் சூம் உண்டு பாக்க படம் மற்றபடி ரொட்டேட், ஸ்லைட்ஷோ, ஆல்பம், நிழற்படம் எடுத்த நாள் போன்ற தகவல்கள் (டிஜிட்டலாக இருந்தால்) ஆகிய வசதிகளும் உண்டு.
Categories: image
மதியம் புதன், மார்ச் 29, 2006
முன்னேற ஒரு தளம்
இத்தளத்தில் வாழ்க்கைக்கு உதவும் யோசனைகளை தொகுத்திருக்கிறார்கள்.மனம் சலனமற்றிருக்கும்போது பொறுமையாக படித்தால் நிறைய பயனுண்டு.இவை இப்போதெல்லாம் விலையுயர்ந்த யோசனைகளாக ‘கோச்சிங் க்ளாஸ்களில்’ சொல்லித்தரப் படுபவை.
Categories: life-easy
மதியம் செவ்வாய், மார்ச் 28, 2006
புதுமையான புகைப்பட சேமிப்பு தளம்
மதியம் திங்கள், மார்ச் 27, 2006
உங்கள் ப்ராஜெக்ட்களை கவனிக்க
முன்பெல்லாம் இதற்கென்றே தனியாக ஒரு சாஃப்ட்வேரை கம்பெனிகள் டிசைன் செய்யும், (தமிழ்ல பேசு நண்பா நிறைய பேர் திட்டு வாங்கிட்டு இருக்காங்க) சரிப்பா வடிவமைத்தன. இப்போது இதற்கென்றே நிறைய தளங்கள் வந்து விட்டன, அவற்றில் (சிறந்த) ஒன்று இத்தளம்.முக்கியமானது இவற்றின் வசதிகள் அது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட ஆதரவு.சரி ஏகப்பட்ட நல்ல தளங்கள் நிறைய காண்பதால் இனி கொஞ்சம் அதிகமாகவே பதிவுகள் (தொல்லைகள்) இருக்கும் பரவாயில்லையா?
Categories: life-easy,onlinetools
மதியம் சனி, மார்ச் 25, 2006
ஆன்லைன் ஸ்டோரேஜ் தளங்களின் பட்டியல்
மதியம் வெள்ளி, மார்ச் 24, 2006
ஆன்லைன் படிவம்
இப்பல்லாம் இணையத்துல நாம எதுக்குமே கஷ்டப்படத் தேவையில்ல இதோ ஆன்லைன் ஃபார்ம் உருவாக்க ரெண்டு தளங்கள் (அதுவும் பாருங்க ஒரு தளம் பாக்கவே முடியல எந்த வகை சேவைனாலும் ரெண்டு மூணு தளங்கள் கிடைக்குது) முதல் தளம்
நம்மள பொறுத்த வரை இது பெஸ்ட் ஏன்னா இப்ப தான் டெவலப்பிங்ல இருக்கு அழகான இன்டர்ஃபேஸ் டெமோவுக்காக யோசிச்சப்ப புதுசா ஒரு தளம் உருவாக்கிட்டேன் ஹி ஹி ரெண்டாவது இதுல ஒரே ஒரு ஃபார்ம் தான் உருவாக்க முடியும் (பணம் குடுத்தா அப்க்ரேட் உண்டு) இத பாத்துட்டேன்கிறதுக்காக சொல்றேன் அப்புறம் உங்க சாய்ஸ்
Categories: online-tools
மதியம் வியாழன், மார்ச் 23, 2006
உங்கள் க்ளிக்குகள் மூலம் கூட உதவலாம்
மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் இயக்கும்
இத்தளத்தில் உள்ள தேடுதல் கருவியில் கிடைக்கும் ரிசல்ட்டை க்ளிக் செய்தால் வரும் பணம் NSPCC எனப்படும் child cruelty தடுப்பு (இதற்கு தமிழில் என்ன?) அமைப்புக்கு போய் சேரும். நல்ல விஷயம் உதவுவோமே
Categories: life-easy
மதியம் புதன், மார்ச் 22, 2006
ஆன்லைன் வீடியோ சேவை
இணையத்துல ஏற்கனவே நிறைய வீடியோ கடல்கள் உண்டு அதுல இது கொஞ்சம் வித்தியாசமாவும் இருக்கிறதால சொல்ல வேண்டி இருக்கு.
இந்த தளம் மத்த எல்லா தளங்கள் போலவும் வீடியோவ சேமிச்சுக்க உதவறது தான்,அதுக்கும் மேல நீங்க மிக எளிமையா வீடியோவ மிக்ஸ் பண்ண முடியும் சவுண்ட் மிக்ஸிங் கூட பண்ணலாம் மற்றும் குரூப், வசதிகளும் உண்டு ஆனாலும் இன்னும் நிறைய வசதிகள் தரவேண்டி இருக்கு
அடுத்தது இந்தத் தளம் இது தான் இப்ப நம்பர் ஒன் இதப்பத்தி எதுவும் சொல்லத் தேவையில்லைனு நினைக்கிறேன் நீங்களே போய் பாத்துக்குங்க
Categories: video
மதியம் செவ்வாய், மார்ச் 21, 2006
பிரச்னை
இதற்கு முன்பு நான் எழுதிய பதிவு தமிழ்மணத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை இந்த இடுகை எடுத்துக்கொள்ளப்படுமா என அறியவே இப்பதிவு மற்றும் உங்கள் "உங்கள் வலைப்பூவிற்கு வகைப்பாடு (கேட்டகரி) சேர்ப்பது எப்படி?" பதிவு சில பிரச்னைகளால்
இங்கேயும் இடப்பட்டிருக்கிறது
ஓட்டு கேட்போமா?
இன்னைக்கு வலைப்பூக்கள்ல ஓட்டு போட போல் வைக்கிற சேவை வழங்குற தளம் ரெண்டு சொல்றேன்.அதுக்கு முன்னாடி நேத்து கோடிங் பத்தி எழுதினேன் இல்லையா அதில உங்களுக்கு கோடிங் காட்ட வேண்டிய பிரச்னையால உங்களால கமென்ட் எழுத முடியாம போயிருக்கலாம்.இனி அப்படி நடக்காது, இப்ப விஷயத்துக்கு வருவோம்.
ரெண்டு தளங்களுமே மிக எளிதாக இன்ஸ்டால் செய்ய முடியும் வழிமுறை தருகின்றன.முதல் தளம் இது மிக அழகான டிசைன் தளம் மற்றும் நம் தளத்தில் தெரியும் ஓட்டு ”போல்” கோட் ரெண்டுமே அழகா இருக்கு.ஆனா தமிழ்ல யுனிகோட் சப்போர்ட் ஆகாது.(டெமோ)
அடுத்தது இந்தத் தளம் இதுல டிசைன் கொஞ்சம் சுமாரா தான் இருக்கு ஆனா யுனிகோட் சப்போர்ட் ஆகும்,தமிழ்ல வேணும்கிறவங்க இத உபயோகிச்சுக்கலாம்.
Categories: blogtools
மதியம் ஞாயிறு, மார்ச் 19, 2006
உங்கள் தளத்தில் எந்தெந்த லிங்க் க்ளிக்கப் படுகிறது?
அதை அறிய வசதி செய்யும் ஒரு தளம் ஏற்கனவே என் சைட் பாரில் இருக்கிறது. இம்மாதம் புதிதாக இரு தளங்கள் கண்டேன் முதல் தளம்... இது ட்ரையல் தான் தருகிறார்கள் பணம் கேட்க வாய்ப்புள்ளது இந்த சைட் போய் க்ளிக் பண்ணவும் எப்படி இயங்குகிறது என அறியலாம் இரண்டாவது இத்தளம் பார்க்கவே அழகு (எனக்குப் பிடித்திருக்கிறது) ஆனால் பாவிகள் கமிங் சூன் போட்டு விட்டார்கள் பதிவு
மட்டுந்தான் செய்ய விடுகிறார்கள் (ம்ச் திட்டக்கூடாது). ஓவர்லே ஹீட் என்று ரெண்டு பட்டன் இருக்கிறது விவரம் அறிந்து கொள்ளவும் நல்ல தளமாக வரும் இப்போதே உறுப்பினராகிடுங்கள் அதுவரை இதை வைத்து ஓட்ட வேண்டியது தான்.
Categories: blogtools
மதியம் சனி, மார்ச் 18, 2006
கருத்திடுகை (கமென்ட்) பிரியர்களுக்காக
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு கமெண்ட் விரும்பி அல்லது கமெண்ட் எழுத விரும்புபவர் ஆனால் நேரமில்லை என்பவர் என வைத்துக்கொள்வோம். (கருத்திடுகை? - பூக்காடு காண்க) மானாங்கண்ணியாக நீங்களும் பத்து பதினைந்து வலைப்பூக்களுக்கு கமெண்ட் அடிக்கிறீர்கள்.அவற்றில் கருத்துகள், கேள்விகள், நியாயங்கள் என நிறைய இருக்கலாம், அவற்றிற்கு மற்றவர்கள் அப்புறம் பதிலிடுவார்கள். இப்போது ஒவ்வொரு வலைப்பூவுக்கும் போய் யாரும் உங்களுக்கு பதிலிட்டார்களா? என்ன விவரம் என்று அலைய வேண்டும்.உங்கள்
மொத்த கருத்திடுகைகளையும் ஒரே இடத்தில் பார்த்து அதற்கு யாராவது பதிலிட்டால் உடனே தகவல் தெரிவித்து ஒருங்கிணைக்க ஒரு தளம் இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி யோசித்து உருவாக்கப்பட்ட தளம் தான் இது. உறுப்பினராக பதிவு செய்து விட்டு ஹோம் பக்கம் வாருங்கள் அங்கே கேப்சர் என்று ஒரு பெரிய லின்க் இருக்கும் அதன் பின் செல்ல எல்லா விவரங்களும் அறியலாம்.வேண்டுமானால் முதலில் டெமொ படியுங்கள்
Categories: blogtools
மதியம் வெள்ளி, மார்ச் 17, 2006
உங்கள் தளத்தை அழகு படுத்த
ஏற்கனவே உங்களுக்கு தெரிந்த தளமாக இருக்கலாம் இருந்தாலும் தெரியாதவர்களுக்காக சொல்கிறேன். இத்தளத்தில் ஸ்கிரிப்ட் மூலம் தளத்தை அழகு படுத்தும் ஏகப்பட்ட செய்முறை விளக்கங்கள் உண்டு. உங்களுக்கு பெரிய புரோக்ராமிங் அறிவு இருக்க வேண்டிய தேவை இல்லை. தெளிவான விளக்கங்களும் தரப்படுகிறது, என் வலைப்பூக்களில் நீங்கள் பார்த்த பாப்- அப் பெட்டி செய்தி இத்தளத்தில் கிடைத்ததே.
Categories: html,programming
மதியம் வியாழன், மார்ச் 16, 2006
இன்னொரு ( நல்ல) தள விவர சேவை
என் தளங்களை உற்றுப் பார்த்திருந்தாலே இன்னொரு ஐகான் முளைத்திருப்பது தெரிந்திருக்கும், எனினும் யாரும் மிஸ் பண்ணக்கூடாதென்பதற்காக சொல்கிறேன். performancing எனும் இத்தளம் வலைப்பதிவர்களுக்கு டிப்ஸ் தரும் ஒன்று, இப்புள்ளி விவர சேவை வருவதற்கு முன்பே இத்தளத்தில் உறுப்பினராக பதிந்து இருந்தேன், இப்போது புதிய சேவையாக தருகிறார்கள், மற்ற சேவை வழங்கிகளை விட சிறப்பாக உள்ளது, எதிர்காலத்தில் இன்னும் நன்றாக மெருகேற்றுவார்கள் என நம்புவதால் பரிந்துரைக்கிறேன் மேலும் விவரங்களுக்கு ஸ்கிரீன் ஷாட் பார்க்கவும்
Categories: blogtools
மதியம் புதன், மார்ச் 15, 2006
ஃபைல் ஷேர் மென்பொருள்
எனக்குத் தெரிந்து இது தான் சிறந்த செயலி பகிர் மென் பொருள் (தமிழாக்கம் : அடியேனே) அதுவும் இலவசம், இல்லாட்டி எழுதுவேனா? பதிவிறக்கம் செய்யுமுன் தளத்தில் தரப்பட்டிருக்கும் விபரங்களை கொஞ்சம் படித்துக்கொள்ளுங்கள். பல்மென்பொருள் பிரியர்களுக்கு பிடிக்கும்.தனிப்பட்ட எச்சரிக்கை: வைரஸ் செக் செய்யாமல் பதிவிறக்கம் செய்த எதையும் திறக்க வேண்டாம்.தள முகவரி:க்ளிக்
Categories: software,download
மதியம் செவ்வாய், மார்ச் 14, 2006
டெஸ்க்டாப் ஆர்எஸ்எஸ் மென்பொருள்
வலைப்பூ தகவல் அறிய உதவும் மென் பொருள், முழுக்க முழுக்க க்ளிப்களால் இயங்குகிறது.அதாவது இவர்களின் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் பிறகு பல டெவலப்பர்கள் தரும் விதவிதமான சேவை வழங்கி க்ளிப்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து அவை பற்றிய செய்திகளை உடனுக்குடன்
அறியலாம்.குழப்பமாக இருந்தால் இத்தளம் சென்று பார்த்தீர்களானால் விளங்கி விடும், அப்புறம் ‘ஏன் இந்தப்பய இதப் போட்டு இந்தக் குழப்பு குழப்பறான்’ என்பீர்கள்.இதன் மூலம்
வானிலை, ஸ்டாக்ஸ், செய்திகள், ஆர்.எஸ்.எஸ் ஃபீட்ஸ், மற்றும் பல வசதிகளை பயன்படுத்தலாம். நீங்களும் டெவலப்பராக க்ளிப்களை உருவாக்கலாம்,மிக எளிமையாக. நான்
கூட மூன்று க்ளிப்களை உருவாக்கி இருக்கிறேன். நிறைகள்: அழகிய வடிவமைப்பு (அல்வா
போல வழுக்குகிறது), எளிமையான நேவிகேஷன், ஏகப்பட்ட வசதிகள். குறைகள்: முதல் க்ளிப்
உருவாக்க பயங்கரமாக குழம்பும். பக்ஸ் இருக்க வாய்ப்பிருப்பதால் அனுபவமில்லாதவர்கள்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம் செய்தாலும் மற்ற தகவல்களை பத்திரமாக சேமித்துக்
கொள்ளுங்கள் என்கிறார்கள் (கவலை வேண்டாம் அரிதாகவே அப்படி நிகழும் என நம்புவோம்)தள முகவரி: க்ளிக்
Categories: software,download,blogtools
மதியம் திங்கள், மார்ச் 13, 2006
உங்கள்விருப்படொமைன்நேம்.tk
டெமோ : :க்ளிக் இது ஒரு ரி-டைரக்டிங் தளம். சிறப்பம்சங்கள் ஈ-மயில் ஃபார்வார்டிங் ட்ராபிக் செக் குறைகள் : லேசாக கடுப்படிக்கும் டிசைன், தெளிவான நேவிகேஷன் இல்லை. அவர்கள் சர்வீஸை இலவசமாக நீங்கள் உபயோகப் படுத்துவதற்காக ஒரு விளம்பர பேனரை (ப்ளாக்கர் போலவே) உங்கள் சைட்டில் காட்டுவார்கள்.மற்றபடி சிறியதாக யு.ஆர்.எல் வேண்டும், சொந்த டொமைன் நேம் வேண்டுமென்பவர்களுக்கு இது நல்ல தளம்.தள முகவரி:க்ளிக்
Categories: webhost
மதியம் சனி, மார்ச் 11, 2006
உங்கள் ஆர்ச்சிவை அழகாக்க
டெமோ காண க்ளிக்
கீழே தரப்பட்டிருக்கும் தளத்தில் உள்ள கோடிங்கை காப்பி செய்யுங்கள், உங்கள் ப்ளாக்கர் டெம்ப்ளேட்டுக்கு செல்லுங்கள், அதில் ஆர்ச்சிவ் இரு (அ) மூன்று வரி கோடிங் இருக்கும் ரீப்லேஸ் செய்யுங்கள் டெஸ்ட் செய்யுங்கள்,சந்தேகமிருப்பின் அதில் எழுதியிருக்கும் கைட்லைனை ஒருமுறை படித்து செயல்படவும் தள முகவரி: க்ளிக்
Categories: programming,html
மதியம் வெள்ளி, மார்ச் 10, 2006
உங்கள் வலைப்பூவில் மல்டிமீடியா
மதியம் வெள்ளி, மார்ச் 03, 2006
உங்கள் வலைப்பூவில் ஃப்ளாஷ் கேம்
ஒரு அழகிய ஆர்கனைசர்
இன்டர்நெட்டில் நிறைய பிளானர்கள் உண்டு.தேடியதில் ஓரளவு பார்க்கவே அழகாக டிசைன் செய்திருப்பது இது தான்.இதுவும் பீட்டா ப்ரொடக்ட் என்பதால் தரத்தைநம்பலாம்.உங்கள் ஈவன்ட்களை ஹைலைட் செய்யவும், தேடவும் வசதி உண்டு, மூன்று டிசைன்கள் தருகிறார்கள். நண்பர்களை சேர்க்கும் வசதியும் உண்டு.இச்சேவை இலவசமே. .தள முகவரி: க்ளிக்
Categories: onlinetools,life-easy
மதியம் வியாழன், மார்ச் 02, 2006
மைக்ரோசாஃப்ட் வழங்கும் இலவச தளம்
சிறு முதலீட்டாளர்களைக் கவர மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பீட்டா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. சொந்த டொமைன் நேம், டூல்ஸ், 5 இ-மெயில் அக்கவுண்ட் மற்றும் ட்ராஃபிக் ரிப்போர்ட் ஆகிய சேவைகளை இலவசமாக வழங்குகிறது.மற்றும் கட்டண சேவகளும் உண்டு (நமக்கெதற்கு அதெல்லாம்).இலவச சேவையை ஸ்பான்சர் விளம்பரம் மூலமாக சமாளிப்பதாக சொல்லப்படுகிறது, எனினும் உங்கள் இலவச வெப்சைட்டில் இவிளம்பரங்கள் இருக்காது, நீங்களும் மற்ற விளம்பரங்களை வெளியிட தடையில்லை, கடைசியாக ஆனால் முக்கிய செய்தி : இச்சேவை தற்போது யு.எஸ் வாழ்வோருக்கு மட்டுமே.
தள முகவரி: க்ளிக்