மதியம் திங்கள், செப்டம்பர் 22, 2008

ஆன்லைன் ரசீது தளம்



Web 2.0 வின் முக்கியமான தகுதியான எளிமை இத்தளத்தை பயன்படுத்த ஈர்க்கிறது. உறுப்பினரானதும் உங்கள் நிறுவன லோகோ இன்னபிற அத்தியாவசிய தகவல்கள் தருவது முதல் வேலை, இது ஒரே தடவை தான்.

அப்புறம் க்ளையன்ட் தகவல்கள், அடுத்து பில்லில் வரப்போகும் ஒவ்வொரு பொருளைப் பற்றிய தகவல், விலை விவரம் தந்தால் உங்கள் பில் தயார்.
உங்கள் வாடிக்கையாளர் மின்னஞ்சலுக்கும் அனுப்பும் வசதி உள்ளது.

நிறைய தளங்கள் யு.எஸ் தவிர மற்றவர்களுக்கு வசதிகளை தராது (என்னை வெறுப்பேற்றும் இடம் இது), ஆனால் இத்தளத்தில் இந்திய ரூபாயிலும் பில் போட முடிகிறது.


சிறு தொழில் முனைவோருக்கு உபயோகமான தளம்.

மதியம் ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

பெட்டி சேவை (Widget) வழங்கும் தளம்


வலைப்பூவிற்கு வரும் நண்பர்களை வரவேற்க தளத்தின் இரு பக்கமும் நிறைய பெட்டி சேவைகளை வழங்குவீர்கள். அது போன்ற அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வைத்திருக்கிறது இத்தளம்

பெட்டி சேவைகள் அதிகம், உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்ய தேடுதல் வசதியும் தருகிறார்கள்.

அதற்காக தளத்தையும் ஏகப்பட்ட பெட்டிகளால் நிரப்ப வேண்டாம், அது படிப்போருக்கும் தொந்தரவாகவே அமையும்.

மதியம் சனி, செப்டம்பர் 20, 2008

Tell-a-friend சேவை

உங்கள் தளத்தை காண்போர் அதை அவர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து தர இத்தளம் உதவுகிறது.  இதைப் போல நிறைய தளங்கள் இருப்பினும் அதிக வசதிகளால் அவற்றை பின்னுக்குத் தள்ளுகிறது.


 உதாரணத்திற்கு Gmail, Yahoo, Aim மற்றும் MSN ஆகிய மின்னஞ்சல் சேவைகள் மற்றும் blogger, wordpress அனைத்திலும் அனுப்ப முடியும். செயல்பாடு பற்றி காண இந்த பதிவின் மேல் உள்ள tell-a-friend ஐ க்ளிக்கவும்.

 இதிலேயே Express என்கிற வசதியும் உண்டு. அதாவது அத்தளத்தில் போய் உறுப்பினராக பதிவு செய்ய தேவையில்லை. இருக்கும் Code ஐ மட்டும் நம் தளத்தில் போட்டால் போதும்.

மதியம் செவ்வாய், செப்டம்பர் 09, 2008

இணையத்தில் பணம் சம்பாதிக்க


புத்தகம் எழுதுவதிலோ, ஃபோட்டோக்ராஃபி, இசை, மென்பொருள் எழுதுவதிலோ இன்ன பிற படைப்புத்திறன் வாய்ந்தவராக இருந்தால் இத்தளம் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். விற்பனையில் 80 முதல் 90 சதவீதம் உங்களுக்கே கிடைக்கும். மற்றும் விற்பதற்கு தேவையான அனைத்து டூல்களையும் இலவசமாக (அ) குறைந்த செலவில் உபயோகித்துக்கொள்ளலாம். எதையும் ஒரு வாய்ப்பாக நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமே. தயக்கமிருந்தால் Top Seller போய் பாருங்கள்... தமிழ் பெயர் அன்பர் நான்காம் இடத்தில் இருக்கிறார். Tattoo புத்தகங்களெல்லாம் சேல்ஸில் கலக்குகின்றன. நான் கூட புத்தகம் எழுத யோசிக்கிறேன். மெகா சீரியல் நண்பர்கள், அனுபவசாலிகள், ஓய்வு பெற்றோர், வாய்ப்புக்காக காத்திருப்போர் எல்லோருக்கும் அழகான 'மாத்தி யோசி'.

மதியம் வெள்ளி, ஜூன் 13, 2008

தினமும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நிறைய தளங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக சிறப்பாக செயல்படும் தளம் என்று இதை சொல்லலாம், கான்செப்ட் கொஞ்சம் சிக்கலானது தான். அதாவது இணையத்தில் நிறைய செய்திகளை நிறைய செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடமும் தந்து கொண்டேயிருக்கின்றன. உதாரணத்திற்கு BBC முப்பது செய்திகளை அடுத்த ஒரு மணி நேரத்தில் இடுகிறது என வைத்துக் கொள்வோம். அதன் Editor அவற்றுள் முக்கியமானது என கருதும் மூன்றை highlight செய்யலாம் ஆனால் அதில் உங்களுக்கு பிடித்தமான அல்லது தேவையான செய்தி வேறாக இருக்கலாம். இத்தளம் என்ன செய்கிறதென்றால் அந்த முப்பதையும் காட்டும், அவற்றை உங்களையொத்த ரசனையுள்ள பார்வையாளர்கள் மதிப்பிட உங்கள் ரசனைக்கேற்ற Editing நிகழ்ந்து விடும்.
Voting, Commenting போன்ற வசதிகளும் உண்டு. நீங்கள் வேறு இடத்தில் காணும் செய்தியை தரலாம். உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் நீங்களே செய்திகளை தர ஆரம்பிக்கலாம், உங்களுக்கென்று தனி பக்கம் தருகிறார்கள் வலைப்பூ மாதிரி, அதில் வரும் விளம்பர லாபம் 90% உங்களுக்கே.

மதியம் வியாழன், ஜூன் 12, 2008

ஆன்லைன் சீரியல் (சரியான மொழி்பெயர்ப்பை கமெண்ட் இடலாம்)


இணைய முன்னேற்றத்தின் வேகத்திற்கேற்ப இந்திய நிறுவனங்களும் திறமையிலும், தொழில் நுட்பத்திலும் ஈடு கொடுக்கின்றன. அதற்கு இத்தளம் ஒரு உதாரணம், இணையத்தில் மூன்று நிமிட தொடர் என்பதே ஒரு நல்ல கான்செப்ட். அதையும் குட்டி குட்டி துணுக்குகளாக தந்திருக்கிறார்கள். ராம் என்கிற சென்னை இளைஞனுக்கும் அவன் மனைவி ரியா என்கிற மும்பை பெண்ணுக்கும் இடையிலான வாக்குவாதங்கள் தான் கதை.

இரண்டே இரண்டு கேரக்டர்கள், எளிமையான இசை என்று இயல்பாக வடிவமைக்கப்பட்ட தளம். Youtube மாதிரி பெரிய போட்டியாளர்கள் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை.

சில எபிசோட்கள் போர் தான் என்றாலும் பொழுது போக்க ஏற்ற தளம். பார்வையாளர்களின் கதைகளை படமாக்குவது, எபிசோட்களுக்கு கதை எழுத ஊக்குவிப்பது மாதிரி ஏதாவது முயற்சிக்கலாம். Youtube மாதிரி வலைப்பூக்களில் க்ளிப்களை இணைக்க வழிவகை செய்யலாம்.

எளிமை தான் முக்கியமானது, மூன்று நிமிடம் பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம், சீக்கிரம் வீடியோ பதிவிறங்குகிறது, மெம்பராக பதிவு செய்யும் தொல்லையில்லை.

அதிகமாக மார்கெட்டிங் ஏதும் செய்யவில்லை போலிருக்கிறது, Google ல் போட்டால் இத்தளமே
(வரவே) வரவில்லை.